சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டக் கூட்டம் செப்டெம்பர் 20ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஹுசிந்தாவ் இக்கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்தினார். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான பல கட்சிகள் ஒத்துழைத்து, அரசியல் கலந்தாய்வு மேற்கொள்ளும் முக்கிய அமைப்பாகும். வலிமையான உயிராற்றலையும் ஒளிமயமான எதிர்காலத்தையும் கொண்டது, இவ்வமைப்பு என்று ஹுசிந்தாவ் சுட்டிக்காட்டினார். கடந்த 60 ஆண்டுகளில், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு, தேசியப் பொருளாதாரத்தை மீட்டு வளர்ப்பது, மக்களின் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்துவது, பல்வேறு சமூக சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது, சோஷியலிச புரட்சி மற்றும் கட்டுமானத்தை முன்னேற்றுவது முதலிய துறைகளில் இன்றியமையாத பங்கு ஆற்றியுள்ளது. இது குறித்து ஹுசிந்தாவ் வெகுவாக பாராட்டினார்.
சீனத் தனிச்சிறப்புடைய இந்த அரசியல் அமைப்பு மற்றும் ஜனநாயக வடிவம், சீனாவின் சோஷியலிச ஜனநாயக அரசியல் கட்டுமானத்தின் மாபெரும் புத்தாக்கமாகும். இதைப் பேணிமதித்து, நீண்டகாலம் நிலைநிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத்தொடரில், பல்வேறு வகை கருத்துக்கள் போதியளவில் தெரிவிக்கப்படலாம். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், சீன அரசும், சில முக்கிய பிரச்சினைகள் பற்றி, கலந்தாய்வு மூலம் இவ்வமைப்பின் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் கேட்டறிகின்றன.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு, சீனத் தனிச்சிறப்புடைய சோஷியலிச அரசியல் வளர்ச்சிப் பாதையை உறுதிப்படுத்த வேண்டுமென, ஹுசிந்தாவ் வலியுறுத்தினார்.
சோஷியலிச ஜனநாயக அரசியலை வளர்க்க, மனித குல அரசியல் நாகரீகத்தின் பயனுள்ள சாதனைகளைப் பயன்படுத்த வேண்டும். மேலை நாடுகளின் அரசியல் மாதிரியை நேரடியாக பயன்படுத்தத் தேவையில்லை. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டில் பங்கெடுத்த பல்வேறு கட்சிப்பிரிவுகள், குழுக்கள், தேசிய இனங்கள் மற்றும் பல்வேறு துறையினர், சீனத் தனிச்சிறப்பியல்புடைய சோஷியலிசத்துக்கான அரசியல் மற்றும் சிந்தனையிலுள்ள கருத்தொற்றுமைகளை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் அரசியலிலான சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் பங்கினை போதியளவில் வலுப்படுத்துவது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தமது தலைமையை மேம்படுத்துவதில் முக்கிய உள்ளடக்கமாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளும் திறனையும், தகுநிலையையும் வலுப்படுத்துவதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. இது பற்றி, ஹுசிந்தாவ் கூறியதாவது:
எதிர்காலப் பணிகளில், அரசியல் கலந்தாய்வை மேற்கொள்ளும் தன்னார்வத்தன்மை மற்றும் முன்முயற்சியை வலுப்படுத்தி, கலந்தாய்வின் உள்ளடக்கங்களை முறைப்படுத்த வேண்டும். ஜனநாயகக் கண்காணிப்பு அமைப்பு முறையை ஆக்கப்பூர்வமாக கண்டறிந்து மேம்படுத்தி, ஜனநாயகக் கண்காணிப்பின் தரத்தையும் பயனையும் உயர்த்த வேண்டும். மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு வழங்கிய உண்மை கருத்துக்களையும் நல்ல முன்மொழிவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இம்மாநாடு, மக்களின் கருத்துகளை வெளிப்படுத்தி, பணிகளை பயனுள்ளதாக திருத்தி, சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளும் திறனை உயர்த்தும் முக்கிய வழிமுறையாக, அதை கருத வேண்டும் என்று ஹுசிந்தாவ் குறிப்பிட்டார்.
|