• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-23 09:44:24    
ச்சின் நாட்டுப் பெண்கள் 1

cri

ச்சின் நாட்டின் தூதனாக வந்த ஷாங் யிக்கு ச்சு நாட்டில் தடபுடலான வரவேற்பு, விருந்து, கொண்டாட்டம் என்று எதுவும் பெரியளவில் வழங்கப்படவில்லை. ச்சு நாட்டு அரசரும் தூதனாக வந்த ஷான் யியை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தனக்கென இடப்பட்ட கடமையை நிறைவேற்ற ஷாங் யி நீண்டகாலம் ச்சு நாட்டில் தங்க வேண்டியிருந்தது. எதற்காக ச்சு நாட்டுக்கு தூதனாக வந்தானோ அந்த கடமையும் நிறவேறாமலிருக்க, திட்டமிட்டதை விட நீண்ட காலம் தங்கிய காரணம் அவன் கையில் இருந்த கொஞ்சநஞ்ச காசும் கரைந்துகொண்டிருந்தது. பணப்பற்றாக்குறை பிரச்சனை வந்துவிட, வேறு வழியில்லாமல் ச்சு நாட்டு அரசனை பார்க்கச் சென்றான் ஷாங் யி.


தூதனாக வந்தபோதே பெரிதாக ஒன்று இவனை கண்டுகொள்ளவில்லை, இந்நிலையில் பொருளுதவி வேண்டுமென அங்கு போய் நிற்கமுடியுமா??
நிச்சயம் முடியாதல்லவா. ஆக, ஷாங் யி அரசனிடம் தன் மதிநுட்பத்தால் தேவையானதை பெற்றுவிடலாம் என்று அவரைக் காணச் சென்றான்.
அரசனை சந்தத்ததும், "அரசே, தங்களுக்காக ச்சின் நாட்டில் நான் என்ன செய்யவேண்டும், சொல்லுங்கள்" என்றான் ஷாங் யி. அதற்கு அரசனும் "ஹும், ஒன்றும் வேண்டாம் தூதனே. இங்கே எனது ச்சு நாட்டில் எல்லாமே இருக்கிறது. முத்து, தங்கம், ரத்தினங்கள், தந்தங்கள் என எது வேண்டுமெனிலும் இங்கே கிடைக்கின்றன. ஆக, ச்சின் நாட்டிலிருந்து அப்படியென்ன பெரிதாக எனக்கு தேவைப்படும், அப்படியென்ன இங்கில்லாத ஒன்று என் ஆர்வத்தை தூண்டியெழுப்பிவிடப் போகிறது" என்றானாம்.
அதற்கு ஷாங் யி, "ஆ, நீங்கள் இப்படிச் சொல்ல காரணம், இன்னும் நீங்கள் ச்சின் நாட்டுப் பெண்களை பார்க்காததுதான். உலகிலேயே மிக அழகான பெண்கள், ச்சின் நாட்டுப் பெண்கள்தான். ச்சின் நாட்டுப் பெண்களை முதல்முறையாக பார்ப்பவர்கள் அவர்களை விண்ணுலக தேவதைகள் இங்கு வந்துவிட்டனரோ என்றே கருதுவார்கள்" என்றான்.


இதைக் கேட்ட அரசனுக்கு கொஞ்சம் ஆர்வமேற்பட்டது. "நான் இதுவரை ச்சின் நாட்டைச் சேர்ந்த எந்த பெண்ணையும் பார்த்ததில்லை. நீ கூறுவது போல ச்சின் நாட்டுப் பெண்கள் உண்மையிலேயே அவ்வளவு அழகு என்றால், நிச்சயமாக அவர்களுக்கு எப்படி மதிப்பளித்து, பாராட்டுவது என்பது எனக்கு தெரியும்" என்றான் அரசன். அதன்பின் ஷாங் யிக்கு ஏராளமான பொன்னும், அன்பளிப்புப் பொருட்களும் கொடுத்து, ச்சின் நாட்டிலிருந்து திரும்பி வரும்போது, கூடவே அந்நாட்டு அழகிகள் சிலரையும் கொண்டுவரும்படி கூறி அனுப்பினான் அரசன்.
இதை அறிந்த அரசனின் ராணிகள் இருவர் ஷாங் யியை தனியே அழைத்து, " நீ ச்சின் நாட்டுக்கு போகிறாய் என்று கேள்விப்பட்டோம், இந்த 10 ஆயிரம் பொற்காசுகள், நீ பயணத்துக்கும், வழிச் செலவுக்கும் இதை வைத்துக்கொள்" என்றார்கள். இரு ராணிகளில் ஒருவர் கூடுதலாக ஐயாயிரம் பொற்காசுகளை ஷாங் யிக்கு கொடுத்தார். இந்த ராணிகள் ஷாங் யிக்கு வலிய வந்து பொற்காசுகளை தந்ததற்கு என்ன காரணம், பின்னணி என்று நினைக்கிறீர்கள் அல்லவா? தூதனாக வந்து கண்டுகொள்ளப்படாமல் கிடந்த ஷாங் யிக்கு இப்போது பொன்னும், பொருளும் ஆளுக்கு ஆள் தருகிறார்கள் பாருங்கள்.