• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-23 20:37:29    
தேசிய விழாவுக்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்தன

cri

தற்போது, சீனத் தேசிய விழா ராணுவ அணிவகுப்புக்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. சுங்சிங், ஹாங்காங் முதலிய இடங்களில் தேசிய விழாவை வரவேற்க பல்வேறு கொண்டாட்ட நடவடிக்கைகள் நடைபெற்றன. தேசிய விழா ராணுவ அணிவகுப்பு தலைமையகத்தின் துணைத்தலைவரும், செய்தித்தொடர்பாளருமான கெளசியான்கோ 23ம் நாள் பெய்ஜிங்கில் இவ்வாறு தெரிவித்தார்.

தியென் ஆன் மென் சதுக்கத்தில்

56 சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த 112 குழந்தைகள், அக்டோபர் முதல் நாளன்று தியன் ஆன்மன் சதுக்கத்தில் தேசிய கொடியை வரவேற்று, இங்கு நடைபெறும் தேசிய விழா கொண்டாட்ட நடவடிக்கையில் கலந்துகொள்வர்.

சீனாவின் தென்மேற்கு நகரான சுங்சிங்கில், 22ம் நாளிரவு தலைசிறந்த திரைப்பட கண்காட்சித் துவங்கியது. அடுத்த மூன்றரை திங்கள் காலத்தில் நூற்றுக்கு மேலான திரைப்படங்கள் இலவசமாக இங்கு திரைப்படப்படும்.

22ம் நாள் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில், நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கலந்துரையாடல் நடைபெற்றது. சீன அரசுத் துணைத் தலைவர் ஷிசின்பிங் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.