
சீனாவின் சான் சி மாநிலத்தின் சி அன் நகரத்துக்கு வடப்பகுதியில், சி ஹன் வம்ச அரசர்களின் கல்லறைகள் பல அமைந்துள்ளன. இதில், ஹன்யாங் கல்லறை, சுமார் 1200 ஆண்டுக்கால வரலாறுடையது. இப்போது, அக்கல்லறை சிதிரத்தில்
 
சீனாவின்முதலாவது நவீனமயமாக்க தரைக்கடி அரும்காட்சியகம், கட்டியமைக்கப்பட்டது. சி ஹன் வம்சம், சீனாவின் இரண்டாவது நிலப்பிரபுத்துவ வம்சக்காலமாகும். 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான ஹன்யாங் கல்லறையில், அதன் நான்காவது அரசர் லீயு ச்செயின் பூத உடல் புதைவினை செய்யப்பட்டுள்ளது.
 
இந்த அருங்காட்சியகத்தின் வழிகாட்டி சாங் பே கூறியதாவது: லீயு ச்செ அரசராக இருந்த 4வது ஆண்டில் இக்கல்லறை கட்டியமைக்கப்பட்டது. 28 ஆண்டுகளுக்குப் பின் கட்டிமுடிவடைந்தது என்றார் அவர். ஹன்யாங் கல்லறை மண்டலத்தில், சுமார் 10 ஆயிரம் கல்லறைகள் நிறைந்து வரியாக இருக்கின்றன. சரிவான பாதை நெடுக்கிலும், தரைக்கடி காட்சி
 
அறைகள்ஏற்பட்டன. கண்ணாடி இடைவழிகளின் மூலம், பேரரசரின் கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட கடுமட்பாண்ட போர்வீரர் உருவச்சிலைகளைப் பார்க்கலாம். வழிகாட்டி சாங் பே அறிமுகப்படுத்தியதாவது:அவர்களின் உடல் பகுதி, கடுமட்பாண்ட மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டது என்றார் அவர்.
|