சீனாவின் பல்வேறு தேசிய இனங்களின் செழுமை
cri
சீனாவின் தேசிய இனக் கொள்கைகள் மற்றும் பல்வேறு இனங்களின் கூட்டு செழுமை என்ற வெள்ளையறிக்கையை, சீன அரசவையின் செய்தி அலுவலகம் 27ம் நாள் வெளியிட்டது. நவ சீனா நிறுவப்பட்ட பின், நாட்டின் நிலைமையின்படியே, தேசிய இன சமம், ஒற்றுமை, தன்னாட்சி, கூட்டு செழுமை ஆகியவற்றை உள்ளடக்கமாக கொண்ட கொள்கையை சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன அரசும் வகுத்து நடைமுறைப்படுத்து வருகின்றன. 2008ம் ஆண்டு, தேசிய இனப் பிரதேசங்களின் பொருளாதார அளவு, 1952ம் ஆண்டின் 579 கோடி யுவானிலிருந்து 3 இலட்சம் கோடி யுவானுக்கு அதிகரித்தது என்று வெள்ளையறிக்கை தெரிவித்தது. சீனாவில் மொத்தம் 56 இனங்கள் இருக்கின்றன. 2000ம் ஆண்டில் ஹான் இனம் தவிர்ந்த தேசிய இனங்களின் மக்கள் தொகை, 10.6 கோடியாகும். இது, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.4 விழுக்காடு வகிக்கிறது.
|
|