சீனாவில் பல்வேறு இனங்களின் கூட்டு செழுமை
cri
சீனாவின் தேசிய இனக் கொள்கைகள் மற்றும் பல்வேறு இனங்களின் கூட்டு செழுமை என்ற வெள்ளையறிக்கையை, சீன அரசவையின் செய்தி அலுவலகம் 27ம் நாள் வெளியிட்டது. நவ சீனா நிறுவப்பட்ட பின், நாட்டின் நிலைமையின்படியே, தேசிய இன சமம், ஒற்றுமை, தன்னாட்சி, கூட்டு செழுமை ஆகியவற்றை உள்ளடக்கமாக கொண்ட கொள்கையை சீன கம்யூனிஸ்ட் கட்சியும் அரசும் வகுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இது, பல்வேறு இன மக்களின் ஆதரவு பெற்றுள்ளது. 2008ம் ஆண்டு, தேசிய இனப் பிரதேசங்களின் பொருளாதார அளவு, 1952ம் ஆண்டின் 579 கோடி யுவானிலிருந்து 92 மடங்காகி, 3 இலட்சம் கோடி யுவானுக்கு அதிகரித்தது என்று வெள்ளையறிக்கை தெரிவித்தது. உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் பல்வகை பயங்கரவாத சக்தி, பிரிவினை சக்தி மற்றும் தீவிரவாத சக்திகள், சீனாவை ஊடுருவி சீர்குலைக்கும் செயல்களை, சீனா கண்டிப்பாக தடுத்து ஒடுக்கும் என்றும் வெள்ளையறிக்கை சுட்டிக்காட்டியது. தவிரவும், உருமுச்சி ஜுலை 5ம் நாள் சம்பவத்துக்குப் பின், பொதுவாகக் கூறின், சீனாவின் தேசிய இனக் கொள்கை மாறாது என்று சீனத் தேசிய இன விவகார ஆணையத்தின் தலைவர் யாங் ஜிங் 27ம் நாள் பெய்ஜிங்கில் கூறினார். நேரம், நிலைமை முதலியவற்றின் மாற்றக்கேற்ப, இக்கொள்கை முன்பு இருந்த அடிப்படையில் மேலும் மேம்படும் என்றும் அவர் தெரிவித்தார். சீனாவில் மொத்தம் 56 இனங்கள் இருக்கின்றன. 2000ம் ஆண்டில் ஹான் இனம் தவிர்ந்த தேசிய இனங்களின் மக்கள் தொகை, 10.6 கோடியாகும். இது, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.4 விழுக்காடு வகிக்கிறது.
|
|