நவ சீனா நிறுவப்பட்ட 60வதுஆண்டு நிறைவு வைர விழா வரவுள்ளது. சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ் 28ம் நாள் அரசவையின் வழமையான கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, தேசிய விழாவின் தொடர்புடைய பணிகளை ஏற்பாடு செய்தார்.தேசிய விழாவின்போது, பல கொண்டாட்ட நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன.
அப்போதைய உற்பத்தி மற்றும் வாழ்க்கை பற்றிய பல்வகை பணிகளை சீராக ஏற்பாடு செய்து, சிறந்த சமூக ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இவ்விழாவைக் கொண்டாடுவதற்கு உத்தரவாதமளிக்க வேண்டும் என்று இக்கூட்டம் சுட்டிக்காட்டியது.
அக்டோபர் முதல் நாள், பெய்ஜிங்கின் தியென் ஆன் மன் சதுக்கத்தில், சீன மக்கள் குடியரசின் வைரவிழாக் கூட்டமும், ராணுவ அணிவகுப்பும், பொது மக்களின் ஊர்வலமும் நடைபெறும். அப்போது, சீன வானொலி நிலையம், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வானொலி, வெளிநாடுக்களுக்கான பண்பலை வானொலி, இணையதளத்திலுள்ள ஒளிப்பதிவுகள், நிழற்படங்களைக் கொண்ட கட்டுரைகள் ஆகிய வழிமுறைகளின் மூலம், வைரவிழாக் கொண்டாட்டம், பன்முகங்களிலும் நேரடியாக அறிவிக்கப்படும்.
நவ சீனாவின் வைர விழா தொடர்பான கொண்டாட்ட நடவடிக்கைகள் பற்றி செய்திகளைச் சேகரித்து, அறிவிக்கும் வகையில், 53 ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து வருகின்ற 89 செய்தியாளர்கள் 27ம் நாள் பெய்ஜிங் வந்தடைந்தனர். வைர விழாவின் தொடர்புடைய நடவடிக்கைகளை செய்தியாளர்கள் கண்டுகளிப்பர்.
தவிர, பெய்ஜிங்கின் காவற்துறை, கண்காணிப்பை வலுப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.மக்களின் சுற்றலா பயணம் சீராக இருப்பதை உத்தரவாதம் செய்யும் வகையில், சீனாவின் போக்குவரத்து வாரியங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
|