• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-29 14:34:17    
Xu Zhou நகரில் சிறார் பாடல்களைப் பாடும் நடவடிக்கை

cri
குழந்தைகள், சில தலைசிறந்த சிறார் பாடல்களைக் கேட்டு, சீராக வளர்ந்து வருகின்றனர். இப்பாடல்களில், சீனத் தேசத்தின் அருமையான ஆசையும், பாரம்பரியப் பண்பாட்டு அம்சங்களும் இடம்பெறுகின்றன. இந்த தலைசிறந்த சிறார் பாடல்களை மீண்டும் பாடுமாறு குழந்தைகளை வலியுறுத்தும் பொருட்டு, Xu Zhou நகரின் மகளிர் சம்மேளனம் இவ்வாண்டின் மார்ச் திங்கள் இறுதியில் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு, 20 தலைசிறந்த சிறார் பாடல்களைத் தெரிவு செய்தது. குழந்தைகளுக்கென ஆக்கப்பூர்வ சீரான பண்பாட்டுச் சூழலை வழங்கி, அவர்களின் உலகத்தை செழிப்பாக்குவது என்பது, இந்நடவடிக்கையின் நோக்கம்.

மேலதிக குழந்தைகள் இத்தலைசிறந்த சிறார் பாடல்களைக் கேட்கத் துணை புரியும் பொருட்டு, Xu Zhou நகரில் 10 பள்ளிகளில், இந்நடவடிக்கையின் மூலம் கிராமங்களின் வறிய குழந்தைகள், நகரின் ஆதரவற்றக் குழந்தைகள் மற்றும் உடல் திறன் சவால் கொண்ட குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு மேலும் நல்ல இசைச் சூழலை வழங்க தம்மால் இயன்றதனைத்தையும் செய்வதாக Xu Zhou நகரின் மகளிர் சம்மேளனத்தின் குழந்தைப் பிரிவுத் தலைவர் Wang Zong Cai கூறினார்.

"நடவடிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து பள்ளிகளில், Spring Buds வகுப்பும், ஒதுக்குப்புறப் பிரதேசங்களின் பள்ளிகளும் அடங்கும். பொதுவாக, இப்பள்ளிகளில், இசைக் கல்வி குறைவே. இந்த பத்து பள்ளிகளில் சிறார் பாடல்களைப் பாடும் நடவடிக்கையின் மூலம், Xu Zhou நகரில் இந்நடவடிக்கை பற்றிய செல்வாக்கை உயர்த்த முடியும்" என்று அவர் கூறினார்.

Yin Zhuang மையப் பள்ளியில், குழந்தைகளின் பாடல் ஒலி எப்போதும் கேட்கிறது. இப்பள்ளியின் சீன மொழி ஆசிரியர் Wu Chun Yan அம்மையார் சிறார் பாடல்கள் பற்றி கூறினார்.

"சிறார் பாடல்கள், குழந்தைகளின் வாழ்க்கையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவை. குறுகிய சிறார் பாடல்களின் கட்டமைப்பு சிக்கலற்றது. தவிர, இச்சிறார் பாடல்கள் படிப்பதற்கு ஏற்றதாக இருப்பதால், குழந்தைகளால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்பட முடியும். குழந்தைகளின் மொழி வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு இப்பாடல்கள் சிறப்பு பங்காற்றுகின்றன. இது மட்டுமல்ல, பல தலைசிறந்த சிறார் பாடல்களின் மூலம், சீனத் தேசத்தின் தலைசிறந்த பாரம்பரியம் கையேற்றப்படுகிறது. நாகரீகத்தைக் கையேற்றி, அறிவை அதிகரித்து, குழந்தைகளின் விவேகத்தையும், கற்பனையையும் உயர்த்தி, அவர்களின் ஒழுக்க நெறியை வளர்ப்பதற்கு இப்பாடல்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குழந்தைகள் பாடல்களைப் பாடும் வேளையில், மிக மகிழ்ச்சியும் பெறலாம்" என்று ஆசிரியர் Wu Chun Yan கூறினார்.

சிறார் பாடல்களைப் பாடும் நடவடிக்கையில், Xu Zhou நகரில் 150 தொண்டர்கள் சேர்ந்துள்ளனர். தொண்டர்களில், 72 வயதான முதியோரும், 6 வயதான குழந்தையும் இடம்பெறுகின்றனர். அவர்களில், பெரும்பாலானோர், தொழில் முறை இசை கல்வியைப் பெற்றுள்ளனர். பயிற்சிக்கு பின், இத்தொண்டர்கள் பாடல்களைப் பாடும் நடவடிக்கையில் உறுதிப்படுத்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சுமார் 30 வயதான Liang Ge அம்மையார் அவர்களில் ஒருவர்.

"சிறார் பாடல்கள், குழந்தைகள் வளர்ந்து வரும் போக்கில் இன்றியமையாத பண்பாட்டு ஊட்டச்சத்து ஆகும் என்றும், சிறந்த சிறார் பாடல்கள், குழந்தைகளுக்கு ஊக்கம் தர முடியும் என்றும் கருதுகின்றேன். பாடல்களைப் பாடும் நடவடிக்கையின் மூலம், சிறார் பாடல்களைப் பரவல் செய்து கையேற்ற விரும்புகின்றோம். இதில் தொண்டராக பணி புரிவதில் எனக்கு மகிழ்ச்சி" என்று Liang Ge அம்மையார் கூறினார்.

Liang Ge அம்மையார், குழந்தைகளுக்கு பாடல்களை கற்றுக்கொடுக்கும் வேளையில், சிறார் பாடல்களைப் பாடுமாறு தமது 8 வயதான மகளை வலியுறுத்துகின்றார்.

"என் மகள் பாடல்களைப் பாட மிகவும் விரும்புகின்றார். அவர் 'சிறு கிளிஞ்சல் குழல்' 'சிறு குருவி' ஆகிய பாடல்களைப் பாடுகின்றார்" என்று Liang Ge அம்மையார் கூறினார்.

தலைசிறந்த சிறார் பாடல்களைக் கையேற்றி, குழந்தைகள் இந்த தலைசிறந்த பாடல்களைக் கேட்டு, பாடி, மகிழ்ச்சியாக வளர முடியும் என்பது தமக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது என்று 56 வயதான Wang E Jing அம்மையார் கூறினார்.

"தற்போது நான் ஓய்வு பெற்றுள்ளேன். குழந்தைகளுக்கு பாடல்களை பாடக் கற்றுக்கொடுப்பது, எனக்கும் உற்சாகம் தருகின்றது. இந்நடவடிக்கையில் கலந்து கொள்ள மிகவும் விரும்புகின்றேன்" என்றும் அவர் கூறினார்.

இது வரை, தலைசிறந்த சிறார் பாடல்களைப் பாடும் நடவடிக்கை, Xu Zhou நகரின் துவக்க நிலைப் பள்ளிகளிலும், பாலர் பள்ளிகளிலும் நடைபெற்று வருகின்றது. இந்நடவடிக்கையின் மூலம், குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வளர்ந்து வரும் வேளையில், அவர்களுக்கு தாய்நாட்டின் மீதான புரிந்துணர்வும் அன்பும் அதிகரிக்கும்.