• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-29 09:57:45    
இறால் இடம்பெறும் ஒரு வகை நூடுலஸ்

cri
வாணி -- வணக்கம், சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
க்ளீட்டஸ் -- வணக்கம். எங்களுடன் சேர்ந்து சுவையான சீன உணவு வகைகளைத் தயாரிக்கலாம்.வாருங்கள்.
வாணி -- க்ளீட்டஸ், தமிழகம் கடலோர பிரதேசத்தில் அமைந்துள்ளது. அங்கே மக்கள் கடல் நீர் வாழ்வினங்களைச் சாப்பிடுவதுண்டு. அல்லவா?
க்ளீட்டஸ் – ஆமாம், மீன், இறால் முதலிய பல வகைகள் கிடைக்கலாம்.

வாணி – தமிழ் நண்பர்களில் இறால் உணவை விரும்பியவர்கள் அதிகம். இன்றைய நிகழ்ச்சியில் இறால் இடம்பெறும் ஒரு வகை நூடுலஸ் தயாரிப்பு முறையை எடுத்துக் கூறுகின்றோம்.
க்ளீட்டஸ் – நல்லது.
வாணி – முதலில் தேவையான பொருட்கள் பற்றி கூறுகின்றேன்.
நூடுலஸ் 200 கிராம்
பூசனிக்காய் 150 கிராம்
பெரிய இறால் 10
வெள்ளைப்பூண்டு 5
கோழி சூப் அரை கோப்பை
சமையல் எண்ணெய் 3 தேக்கரண்டி
உப்பு ஒரு தேக்கரண்டி
அரிசி மது அல்லது சமையல் மது அரை தேக்கரண்டி

க்ளீட்டஸ் – முதலில், பூசனிக்காயைச் சுத்தம் செய்து, அதன் தோல் மற்றும் விதைகளை நீக்க வேண்டும். பிறகு, அதனை பொடிப்பொடியாக வெட்டிக்கொள்ளுங்கள்.
வாணி – இறால்களின் தோலை பிரித்து, அவற்றின் தலைகளையும் நீக்க வேண்டும். வெள்ளைப்பூடுகளை மிக சிறியதாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
க்ளீட்டஸ் – வாணலியை அடுப்பின் மீது வைத்து, இதில் 3 தேக்கரண்டி சமையல் எண்ணெயை ஊற்றி, பூண்டுகளை முதலில் இதில் கொட்டி வதக்கவும். பிறகு,

பூசனிக்காய் பொடிகளையும் இதில் கொட்டி, சுமார் ஒரு நிமிடமாக வதக்கவும்.
வாணி – பின்னர், அரை கோப்பை கோழி சூப்பை வாணலியில் ஊற்றி வேகவிடுங்கள். 5 கிராம் உப்பையும், அரை தேக்கரண்டி சமையல் மதுவையும் சூப்பில் சேர்க்க வேண்டும். வாணலியை மூடி வைத்து, அதிக சூட்டில் தொடர்ந்து வேகவிடுங்கள். கொதித்த பின், மிதமான சூட்டில் மேலும் 3 நிமிடங்கள் வேகவிட வேண்டும்.
க்ளீட்டஸ் – இப்போது, இறால்களை வாணலியில் கொட்டலாம். விரைவில் இறால்களின் நிறம் சிவப்பாக மாறி, அது சுருள் தொடங்கும்.

வாணி – வேறு ஒரு வாணலியை அடுப்பின் மீது வைத்து, 2 ரிட்டர் தன்னீரை ஊற்றி, வெந்நீர் தயார் செய்யுங்கள். அடுத்து, நூடுல்ஸை இதில் கொட்டி வேகவிடுங்கள். நூடுல்ஸ் தயாரிக்கப்பட்ட பின், அவற்றை வாணலியிலிருந்து வெளியே எடுக்கவும்.
க்ளீட்டஸ் – நல்ல சுவை கிடைப்பதற்காக, தயாரிக்கப்பட்ட நூடுல்ஸை ஒரு பாத்திரத்தில் வைத்து, குளிர்ந்த நீரை இதில் ஊற்றவும். பிறகு, இந்த நூடுல்ஸை வெளியே எடுத்து, முன்பு தயாரித்த பூசனிக்காய், இறால் இடம்பெறும் சூப்பில் கொட்டலாம்.

வாணி – சரி, இப்போது, சுவையான நூடுல்ஸ் தயார்.
வாணி – அன்பான நேயர்களே, இன்றைய நூடுல்ஸ் தயாரிப்பு முறை கடினமானதல்ல.
க்ளீட்டஸ் – ஆமாம், தேவைப்படும் பொருட்களும் தமிழகத்தில் கிடைக்கலாம்.
வாணி – நேரம் இருந்தால், வீட்டில் சுவையான சீனப் பாணி நூடுல்ஸை தயாரித்து ருசிப்பாருங்கள்.
க்ளீட்டஸ் – மின்னஞ்சல் மற்றும் வான் அஞ்சல் மூலம், எங்களுடன் தங்கள் சீன உணவு தயாரிக்கும் அனுப்பவங்களை பகிர்ந்து கொள்ள உங்களை வரவேற்கின்றோம்.