வெளிநாடுகளில் வாழும் சீனர்களுக்கு அழைப்பு
cri
நவ சீனாவின் வைர விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள, 126 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வாழும் 2000த்துக்கும் அதிகமான சீனருக்கு சீன அரசு அழைப்பு விடுத்தது. நவ சீனாவின் வரலாற்றில் இவ்வெண்ணிக்கை மிக அதிக பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை வரவேற்கும் விதமாக தொடர்புடைய வாரியங்கள் 29ம் நாள் பெய்ஜிங்கில் சிறப்பு விருந்து அளித்தன. சீனாவின் மாபெரும் வளர்ச்சி, சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி ஆகியவை, வெளிநாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான சீனர்களின் ஆதரவு மற்றும் செயல்பாடுகளிலிருந்து பிரிக்கப்பட முடியாது. தாய்நாடும் பொது மக்களும் அதனை மனதில் ஆழமாக பதித்துள்ளனர் என்று சீன அரசவையின் கடல் கடந்த சீன மக்கள் விவகார பணியகத்தின் தலைவர் Li hai feng விருந்தில் கூறினார்.
|
|