சீன அரசவை 30ம் நாள் பெய்ஜிங்கில் பிரமாண்டமான விருந்தை வடத்தி, நவ சீனா நிறுவபப்பட்ட வைர விழாவைக் கொண்டாடியது. ஹூசிந்தாவும், பிற சீனாவின் தலைவர்களும், 4000க்கு மேலான விருந்தினர்களுடன் கூடி தேசிய விழாவைக் கொண்டாடினர். தலைமையமைச்சர் வென்சியாபவ் விருந்தில் உற்சாகமிக்க உரை நிகழ்த்தினார். 60 ஆண்டுகளின் சாதனை, மாபெரும் சீன மக்களுக்குரியது. மாபெரும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குரியது. உற்சாகம் நிறைந்த சீன சிறப்பு வாய்ந்த சோஷலிச சமூகத்திற்குமுரியது என்று வென்சியாபாவ் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கையின் தொடர்ந்த நிதானத் தன்மையை நிலைநிறுத்த வேண்டும். உலகப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டும். தேசிய இன பிரதேசத் தன்னாட்சி முறைமையையும் தேசிய இன மற்றம் மதக் கொள்கையையும் உறுதியாக கடைபிடிக்க வேண்டும். ஒரே நாட்டில் இரண்டு முறைமைகள், ஒரே சீனா எனும் கோட்பாடு முதலியவற்றில் ஊன்றி நிற்க வேம்டும் என்று வென்சியாபாவ் வலியுறுத்தினார்.
|