இளம் நவ சீனாவுக்கு, வளர்ச்சி ரீதியிலான அனுபவங்கள் குறைவு. பணியில் உற்சாகம் நிறைந்த மக்கள், நாட்டின் வறிய நிலைமையை உடனடியாக மாற்ற ஆவர்ந்துள்ளனர். நகரங்களில் இரும்புருக்கு துறை பெரிதும் வளர்ச்சியடைந்திருந்தது. தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் இரைச்சல் ஒலித்துக்கொண்டிருந்தது. 1958ஆம் ஆண்டின் இறுதியில், நீர்த்தேக்கத்தைக் கட்டியமைக்கும் பணியை முடித்த பின், பெய்ஜிங்கில் உள்ள தொழிற்சாலையில் பணி புரிய ஆள் அமர்த்துவது பற்றிய செய்தியைக் கேட்டு, Li Ming Cai உடனடியாக விண்ணப்பித்தார். அவர் பெய்ஜிங் இரண்டாவது எந்திரக் கருவித் தொழிற்சாலையில் பயிற்சிப்பணியாளராக பணி புரியத் துவங்கினார். Li Ming Cai கூறியதாவது: "அப்போது மகிழ்ச்சியாக இருந்தேன். சில நாட்களில் ஓய்வு கிடைத்தது. இன்பமடைந்தேன். திங்களுக்கு உணவுக்கென 12 யுவான் உதவித்தொகையைப் பெற்றேன். நல்ல உணவுகளைச் சாப்பிட முடிந்தது" என்று அவர் கூறினார். நகரில் ஓராண்டு பணி புரிந்த பின், Li Ming Cai சொந்த ஊர் திரும்பினார். அப்போதைய கிராமப்புறங்களில், சுறுசுறுப்பான உழைப்பைச் சார்ந்து, சிலர்
செல்வமடைந்திருந்தனர். ஆனால், குடும்பத்தில் உழைப்பாற்றல் பற்றாக்குறை, இயற்கைச் சீற்றம், நோய்கள் ஆகியவற்றின் காரணமாக, சிலர் வறுமை நிலையில் சிக்கியிருந்தனர். இதற்கிடையில், தொழில்மயமாக்கத்தால் நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்ததால், தானியம் மீதான தேவையும் பெரிதும் அதிகரித்தது. தானியம் உள்ளிட்ட வேளாண் மற்றும் வேளாண் சார் பொருட்களின் அளவு படிப்படியாக குறைந்து விட்டது. 1959ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை சீனாவில் வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் நிகழ்ந்தன. கிராமப்புற வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், Li Ming Cai நகரங்களுக்குச் சென்று வேலைவாய்ப்பைத் தேட முயலவில்லை. Li Ming Caiஐ போல், மூன்று ஆண்டுகளாக நீடித்த இயற்கைச் சீற்றம் நகரவாசி Lin Liவின் மனதில் ஆழப்பதிந்துள்ளது. தானிய விளைச்சல் தொடர்ந்து குறைந்ததால், பட்டினிப் பிரச்சினை சீனாவில் பரவியது. தலைநகர் பெய்சிங்கிலும் கூட, தானியப் பற்றாக்குறை தோன்றியது. பெய்சிங் மாநகர அரசின் விதியின் படி, திங்கள்தோறும் இந்நகரில் வசிப்பவர்களாக பதிவு செய்யப்பட்ட மக்களுக்கு உணவு பெறும் சீட்டு வினியோகிக்கப்பட்டது. வயதுக்கேற்ப, மக்கள் தானியத்தை வாங்கக்கூடிய அளவு வேறுப்பட்டது. Lin Li கூறியதாவது: "அப்போது பல்வகை சீட்டுகள் வினியோகிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக துணி, கோதுமை, அரிசி, உணவு எண்ணெய், உணவு தானியங்கள் முதலியவற்றுக்கான சலுகைச்சீட்டுகள். ஒவ்வொருக்கும் குறிப்பிட்ட அளவு வினியோகிக்கப்பட்டது. இது மகிவும் சிக்கலாக இருந்தது" என்றார் Lin Li.
இன்னல்மிக்க காலக் கட்டத்தைக் கழித்து மீண்ட மக்கள், மாதிரிகளை மனதில் நிலைநாட்ட வேண்டியிருந்தது. ஹூனான் மாநிலத்தைச் சேர்ந்த, விபத்தில் உயிரிழந்த விடுதலைப் படைவீரரான Lei Feng, சீன மக்களின் மனதில் மாதிரியாக மாறினார். 1963ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 5ஆம் நாள், "தோழர் Lei Fengகிடமிருந்து கற்றுக்கொள்வது" என்ற காணிக்கை வாசகத்தை Mao Ze Dong எழுதினார். Lei Fengகிடமிருந்து கற்றுக்கொள்ளும் இயக்கம் சீனா முழுவதிலும் நடைபெற்றது. மற்றவருக்காக சேவை புரியும் Lei Fengகின் எழுச்சி, Lin Li போன்ற அதிகப்படியான இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்தது. Lin Li கூறியதாவது: "அப்போதைய மக்கள் தன்னலமற்றவர்கள். அரசியலுக்கு முக்கியத்துவம் அளித்தனர்"என்றார், அவர். 1966ஆம் ஆண்டு அளவில் மிகப் பெரிய பண்பாட்டு இயக்கம் துவங்கியது. செந்நிறம் விரைவாக சீனாவில் பரவியது. 1968ஆம் ஆண்டு, தலைவர் Mao முன்வைத்த "படித்த இளைஞர்கள் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும்" என்ற முழக்கத்தின் ஊக்கத்துடன், நகரங்களில் உள்ள இடைநிலைப் பள்ளி மாணவர்கள், தொகுதித் தொகுதியாக தத்தமது பெற்றோர், உற்றார் உறவினர் ஆகியோரை பிரிந்து, சொந்த ஊரிலிருந்து வெளியேறி, கிராமப்புறங்களுக்கும், எல்லைப் பிரதேசங்களுக்கும் சென்றனர். கிராமப்புறங்கள் அல்லது மலைப் பிரதேசங்களுக்குச் சென்று பணி புரியும் நடவடிக்கையில் சுமார் 2 கோடி இளைஞர்கள் சேர்ந்தனர். இந்நடவடிக்கை, சீனாவின் ஒரு தலைமுறையினரிடையில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது.
|