யுன்னான் மாநிலத்தின் உற்பத்திக் கட்டுமானப் பண்ணைக்கு அனுப்பப்பட்ட பிறகு, பரந்த அளவிலான கிராமப்புறத்தில் பெரும் சாதனைகள் பெறுவது எளிதானதல்ல என்று லின் லீ அம்மையார் அறிந்து கொண்டார். கிராமப்புறத்தில் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்ததாலும், அங்கு ஒரு லட்சியத்தை உருவாக்கும் லின் லீயின் மனம் நொந்துபோகவில்லை. தன்னுடைய மற்றும் தனது உடன்பணியாளர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த அவர் எப்போதும் பாடுபட்டார். அப்போது, அங்கிருந்த நிலையை அடிப்படையில் மாற்றும் பெரிய கொள்கைகள் இல்லை. இருப்பினும், மற்றவரிடையே நாம் தாக்கம் ஏற்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, எனது பிரிவின் விநியோகத் தலைவராக பதவியேற்றபோது, எமது வாழ்க்கையை மேம்படுத்த ஓராண்டில் 17பன்றிகளுக்கு குறைவாகவே உட்கொள்ள வேண்டும் என்று நான் கோரினேன் சீன மக்கள் குடியரசின் உருவாக்கத்தின் முக்கிய நபர்களில் மாவ் சேதுங், சோ என் லைய், சு தே ஆகியோர் 1976ம் ஆண்டு ஒருவர் பின் ஒருவர் காலமாயினர். அதே ஆண்டின் ஜுலை 28ம் நாள் விடியற்காலை, ஹெபெய் மாநிலத்தின் தாங் ஷான் நகரில் ரிக்டர் அளவையில் 7.8 ஆகப் பதிவான நில நடுக்கம் நிகழ்ந்தது. தாங்ஷான் ஒரு இடிபாடாக மாறியதோடு, இதில், உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்பட்ட மக்களின் எண்ணிக்கை 4 லட்சம். பேரிடர்கள் பலமுறை ஏற்பட்ட அதே ஆண்டின் அக்டோபர் திங்களில், இறுதியாக ஊக்கம் தரும் நம்பிக்கையும் எழுந்தது. குவா கோஃபெங், ஈ ச்சியான் ஈங், லீ ஷியன் நியன் ஆகியோரின் தலைமையிலான சீனக்கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டு, "நால்வர் குழு"எனும் குழுவினரைத் தடைக்காவலில் வைத்தது. அத்துடன், 10 ஆண்டுகளாக நடைபெற்ற பெரிய பண்பாட்டுப் புரட்சி முடிவடைந்தது. நவ சீனாவின் வரலாற்றில் திருப்பு முனை ஏற்பட்டது. இது நிகழ்ந்தபோது, லின் லீ கிராமத்தில் 10வது ஆண்டாக தங்கியிருந்தார். இத்தருணத்தில், அவரது வாழ்க்கையிலும் திருப்பம் வந்தது. 1977ம் ஆண்டு, 11ஆண்டுகளாக துண்டிக்கப்பட்ட உயர் நிலை கல்வியின் மாணவர் சேர்க்கை தேர்வை மீட்க, சீனா தீர்மானித்தது. அதேஆண்டின் குளிர்காலத்தில் நாடளவில், சுமார் 57லட்சம் இளைஞர்கள் இத்தேர்வில் பங்கெடுத்தனர். லின் லீயும் அவரது கணவரும் இதில் கலந்து கொண்டனர். 1 2
|