நவ சீனா நிறுவப்பட்ட கடந்த 60 ஆண்டுகளில் சீனா உலகின் 152 நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்புறவை உருவாக்கியுள்ளது. அறிவியல் தொழில் நுட்பத் துறையில் 97 சர்வதேச மற்றும் பிரதேச நிலை 104 அரசுகளிடை உடன்படிக்கைகளை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு தொடர்ந்து ஆழமாகியுள்ளது. தேசிய விழா கொண்டாட்டச் செய்தி மையம் 30ம் நாள் பெய்ஜிங்கில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சீன அறிவியல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் வான்காங் உரைநிகழ்த்திய போது இவ்வாறு கூறினார்.
அறிவியல் தொழில் நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள சீனப் பணியாளர்கள் சுமார் ஆயிரம் சர்வதேசக் ஆய்வு நிறுவனங்களில் சேர்ந்துள்ளதோடு முக்கிய பங்கை வெளிக்கொணர்ந்து வருகின்றனர். அத்துடன் சீனா ஒரு தொகுதி உயர் தரமிக்க சர்வதேச புத்தாக்க மண்டலங்களையும் அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு மாதிரி தளங்களையும் நிறுவியுள்ளது. வெளிநாட்டு அறிவியல் தொழில் நுட்ப உதவியை உற்சாகத்துடன் மேற்கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்ல அறிவியல் தொழில் நுட்ப ஆய்வு நிறுவனங்களுக்கும் இத்தொழில் நிறுவனங்களுக்கு உதவி வழங்கியுள்ளது என்று வான்காங் கூட்டத்தில் மேலும் கூறினார்.
|