சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு தாய்நாடு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 30ம் நாள் முற்பகல் லாசாவில் கொண்டாட்டக் கூட்டம் நடத்தியது. திபெத் அறிவியல் தொழில் நுட்பத் துறை, கல்வி, மதம், இராணுவம் ஆகியத் துறைகளைச் சேர்ந்தோரின் பிரதிநிதிகளும் விவசாயிகள் ஆயர்கள் மற்றும் மாணவர்களின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு நாட்டுப் பற்றுணர்வையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
லாசா நகரின் duilongdeqing மாவட்டத்து liuwu கிராமத்தைச் சேர்ந்த பிரதிநிதி டாவாசான்பு மிகப்பல விவசாயிகள் மற்றும் ஆயர்களின் சார்பில் கூட்டத்தில் உரைநிகழ்த்தினார். கட்சி மற்றும் அரசின் சிறப்பான அன்புடன் liuwu கிராமத்தில் தன்னாட்சிப் பிரதேசத்தின் இதர வேளாண் மற்றும் மேய்ச்சல் இடங்கள் போல தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிராமத்துக்கு தார் சாலை வந்தது. சககிராமவாசிகள் தொலைக் காட்சி வசதி பெற்றனர். ஒளி நிறைந்த திபெத் பாணி கொண்ட கட்டிடத்தில் வாழ்கின்றனர். சிலர் சீருந்து ஓட்டுகின்றனர். வாழ்க்கை சிறப்பாக வளர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தற்போது திபெத்தின் பல்வேறு இடங்களில் பல்வகை வடிவங்களிலான கொண்டாட்ட நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
|