உலகப் பொருளாதாரத்தில் சீனப் பொருளாதாரம் ஆற்றிய பங்கு, 1978ம் ஆண்டின் 2.3விழுக்காட்டிலிருந்து 2007ம் ஆண்டில் 19.2விழுக்காட்டுக்கு உயர்ந்தது. உலகப் பொருளாதார அதிகரிப்பில் சீனாவின் பங்கு உலகில் முதலிடம் வகிக்கிறது என்று சீனத் தேசிய புள்ளிவிபர ஆணையம் 29ம் நாள் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
1960ம் ஆண்டு, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உலகில் வகித்த விகிதம், 4.6விழுக்காடாகும். 2008ம் ஆண்டு, இது, 6.4விழுக்காடாகும். அத்துடன், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, உலகில் 3வது இடத்தில் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
|