• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-01 22:01:25    
நவ சீனாவின் வைர விழா

cri

அக்டோபர் முதல் நாள் காலை 10:00 மணிக்கு, சீனாவின் தலைநகரான பெய்சிங்கில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் தியென் ஆன் மன் சதுக்கத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத்தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஹுசிந்தாவ் இதில் முக்கிய உரையாற்றினார். தமது தாய்நாட்டைக் கட்டியமைப்பதிலும் உலகத்துக்கு குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுவதிலும் நம்பிக்கையும் திறமையும் சீன மக்களுக்கு உண்டு என்று அவர் கூறினார்.

நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், பல்வேறு கடுமையான இன்னல்களையும் இடர்பாடுகளையும் சோதனைகளையும் கடந்து சீன மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். உலகின் கவனத்தை ஈர்க்கும் சாதனைகள் பெறப்பட்டன என்று ஹுசிந்தாவ் கூறினார்.

தற்சார்ப்பு அமைதியான வெளியுறவுக் கொள்கையிலும் அமைதியான வளர்ச்சிப் பாதையிலும் சீனா தொடர்ந்து ஊன்றி நிற்கும். ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறும் திறந்த உத்திநோக்கைப் பின்பற்றும்.

பஞ்ச சீல கோட்பாடுகளின் அடிப்படையில் எல்லா நாடுகளுடனும் நட்பார்ந்த ஒத்துழைப்பை வளர்த்து, நிலையான அமைதி மற்றும் கூட்டுச் செழுமையான இணக்கமான உலகத்தைக் கட்டியமைப்பதை சீனா தொடர்ந்து முன்னேற்றும் என்று ஹுசிந்தாவ் கூறினார்.

இன்று முற்பகல் பிரம்மாண்டமான அணி வகுப்பு, பொது மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம் ஆகியவை நடைபெற்றன. இரவில் நடைபெறும் கூதூகலக் கூட்டத்தில் 50 ஆயிரம் மக்கள் கலந்து கொள்வர். 30 நிமிடம் நீடிக்கும் வண்ண வானவேடிக்கைகள் இரவு வானத்தை ஒளியூட்டும்.

இன்று, சீன வானொலி பல்வகை வடிவங்களில் தேசிய விழாவுக்கான கொண்டாட்ட நடவடிக்கைகளை பன்முகங்களிலும் அறிவிக்கும்.

நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான லாசா, சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சி, ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசம் உள்ளிட்ட சீனாவின் பல்வேறு இடங்களில் பல்வகை கொண்டாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அக்டோபர் திங்கள் முதல் நாளிரவு, வண்ண ஒளிமயமான வாண வேடிக்கையும் படைப்பாற்றல் மிக்க கலை நிகழ்ச்சியும் பெய்ஜிங் மாநகரின் தியேன் ஆன் மன் சதுக்கத்தில் நடைபெற்றன. சுமார் 60 ஆயிரம் பொது மக்கள் அவற்றில் கலந்து கொண்டனர்.

அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் உள்ளிட்ட சீனக் கம்யூனிட் கட்சி மற்றும் நாட்டுத் தலைவர்களும் பொது மக்களுடன் தாய்நாட்டின் பிறந்த நாளைக் கொண்டாடினர்.