அக்டோபர் முதல் நாள், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவு நாளாகும். சோஷியலிச அமைப்புமுறைமையின் மேம்பாட்டையும் உயிர் ஆற்றலையும் உலகிடம் கடந்த 60 ஆண்டுகளின் கடுமையான ஆராய்ச்சிகளும் வெற்றிகரமான நடைமுறைகளும் எடுத்துக்காட்டியுள்ளன என்று இன்று சீன மக்கள் நாளேடு வெளியிட்ட தலையங்கம் கூறியது. மேலும் வளர்ச்சியின் முக்கிய வாய்ப்புக் காலத்தில் சீனா இருக்கின்றது. நவ சீனா நிறுவப்பட்ட நூற்றாண்டின் போது, சீனா நவீனமயமாக்கத்தை அடிப்படையில் நனவாக்கும். அப்போது, வலிமை, ஜனநாயகம், நாகரிகம், இணக்கம் ஆகியவற்றைக் கொண்ட சோஷியலிச நவீனமயமாக்க நாடு உருவாக்கப்படும் என்று தலையங்கம் கூறியது.
|