• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-01 14:50:53    
உலகத்தை அரவணைப்பது

cri
1982ம் ஆண்டு Lin Li பீகிங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று சீனப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழுள்ள சீன தொலைதூர கடற்போக்குவரத்துத் தலைமை நிறுவனத்தில் பணிபுரிய நியமிக்கப்பட்டார். இழப்புத் தொகை நஷ்ட ஈடு மற்றும் கடல் விபத்துக்கான காப்பீடு அலுவலுக்கு அவர் முக்கியமாக பொறுப்பேற்றார்.
1984ம் ஆண்டு பெப்ரவரி திங்கள் சீன தலைவர் தென்சியௌபிங் குவாங்துங், பூஃசியென் ஆகிய மாநிலங்களைப் பார்வையிட்ட போது அங்கே பொருளாதாரச் சிறப்புப் பிரதேசங்களை நிறுவுவதென்ற கொள்கையை உறுதிப்படுத்தினார். அத்துடன் வெளிநாட்டுக்குத் திறந்து வைக்கப்படும் நகரங்களை அதிகரிக்க அவர் முன்மொழிந்தார். ஏப்ரல் திங்கள் 14 கடலோர நகரங்கள் வெளிநாடுகளுக்கு திறந்து வைக்கப்பட்டன. வாரிய ஊழியர்கள், அறிஞர்கள் போன்றவர்கள் அடுத்தடுத்து வணிகத் துறையில் ஈடுபடத் துவங்கினர். 1986ம் ஆண்டில் லீங்லி துணிவுடன் தமது அரசு சார் பணியை கைவிட்டு மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்குச் சென்றார்.

1986ம் ஆண்டில் எனக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. நான் பதவி விலகி மேற்படிப்புக்காக ஜப்பானுக்கு சென்றேன் என்றார் அவர். ஜப்பானில் படித்த போது பெற்ற அனுபவங்கள் அவருடைய பார்வையை விரிவாக்கின. 2வது உலகப் போருக்கு பின் ஜப்பானிய சமூகம் விரைவாக வளர்ந்துள்ளதை அவர் அங்கே முழுமையாக உணர்ந்தார். 1990ம் ஆண்டு அவர் படிப்பை முடித்து நாடு திரும்பினார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் Lin Li சொந்தமாக ஒரு தொழில் நிறுவனத்தை துவக்கினார். தொழில் நடத்துவதன் மூலம் சீனாவி்ன் முதலீட்டுச் சூழ்நிலையை அவர் படிப்படியாக உணர்ந்துள்ளார்.
காலப்போக்கில் செல்வந்தவர்களில் ஒருவராக Lin Li மாறினார். இந்த பெருமை சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுக் திறப்பை முன்வைத்த தலைமை சிற்பி தென்சியௌபிங்கிற்கே சேர வேண்டும். 1992ம் ஆண்டு சீனாவின் தென் பகுதியில் பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற வேண்டுகோளை தென்சியௌபிங் விடுத்தார்.
சோஷியலிசம், சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பொருளாதாரத்தை வளர்ப்பது, மக்கள் வாழ்க்கை மேம்படுத்துவது ஆகியவற்றை மேற்கொள்ளாவிட்டால் சீனா எந்த வெற்றிகளையும் பெறாது. இதை உறுதிப்படுத்துவதில் தயக்கமில்லை. தொடர்ந்து வளர்ந்து மக்களின் வாழ்க்கை நிலையை தொடர்ந்து உயர்த்தச் செய்தால்தான் மக்கள் நம் மீது நம்பிக்கைக் கொள்வர். நமக்கு ஆதரவளிப்பர் என்று தென்சியௌபிங் கூறினார்.

தென்சியௌபிங் தென்சீனாவில் பணிப் பயணம் மேற்கொண்ட அடுத்த ஆண்டில் லீமின்சாய் வாழ்கின்ற குவேந்தி கிராமம் காட்சியிடப் பிரதேசமாக மாறியது. வீட்டுக்கு அருகிலுள்ள மலைகளும் நீரும் தங்களுக்கு செல்வம் கொண்டுவருமென விவசாயிகள் நம்ப வில்லை.
ஒரு நாள் வழி இழந்த பயணியர் சிலர் லீமின்சாயின் முற்றத்துக்கு வந்தனர். அப்போது அவருடைய மகள் shanshuzhi அவர்களை உபசரித்தார். இது எதேச்சையான ஒரு அனுபவமே. ஆனால் சுற்றுலா உணவு விடுதி நடத்த shanshuzhiக்கு அப்போதுதான் எண்ணம் வந்தது. மற்றவர்கள் எப்படி தொழில் நடத்துகின்றனர் என்று பார்வையிட அவர் நகரங்களுக்கு சென்று மறைமுகமாக அனுபவங்களைக் கற்றுக் கொண்டார்.
நான்கு அறைகளில் 9 படுக்கைகளை வைப்பதன் மூலம் சுற்றுலா பயணத் துறைச் சார்ந்த தொழிலை துவக்கிய அவர் இப்போது இரண்டு முற்றங்கள் கொண்ட விடுதியை நடத்தி வருகிறார். 2006ம் ஆண்டு சீனாவில் விவசாயிகளுக்கான சிறப்புக் தொழில் ஒத்துழைப்புச் சட்டம் வெளியிடப்பட்டது. விவசாயிகள் பல்வகை தொழில்கள் கொண்ட ஒத்துழைப்பு சங்கத்தை நிறுவ ஊக்குவிக்கப்பட்டனர். Shanshuzhi அவரது ஊரில் நாட்டுப்புறச் சுற்றுலா ஒத்துழைப்புச் சங்கத்தின் தலைவராகியுள்ளார்.

நாட்டுப்புறச் சுற்றுலாத் துறை குறிப்பிட்ட காலகட்டத்தில் வளர்ந்த பின் தனிநபராக நடத்த போதிய ஆற்றல் இருக்காது. ஒத்துழைப்புச் சங்கத்தை நிறுவுவதன் மூலம் நாங்கள் குவேந்தி கிராமத்தின் 47 குடும்பங்கள் இணைந்த நாட்டுப்புறச் சுற்றுலாத் தொழிலை நடத்தி வருகிறோம். நிர்வாகச் சட்டவிதிகளை நாங்கள் விவாதித்தோம். கிராமவாசிகள் அனைவரும் இதற்கு வாக்களித்தனர் என்று அவர் விவரித்தார்.
இப்போது குவேந்தி கிராமத்தில் 80 விழுக்காட்டுக் குடுபங்கள் நாட்டுப்புறச் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. சராசரி நபர்வாரி ஆண்டு வருமானம் பத்தாயிரம் யுவானை எட்டியது.
மகள் இவ்வளவு திறமைசாலியாகியதை கண்ட முதியோர் லீமின்சாய் எதிர்கால வாழ்க்கை மீது முழுமையான நம்பிக்கைக் கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் நடுவண் அரசு கிராமப்புறங்களில் மருத்துவ மற்றும் முதுமைக் கால காப்புறுதியைப் பெரிதும் பரவலாக்கியதன் விளைவாக அவர் மேலும் இன்பமாக வாழ்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் லீங்லி தொழில் நிறுவனத்தின் நிர்வாகத்திலிருந்து விலகி ஓய்வு பெற்று முதுமைக்கால வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். அவர் கணவருடன் இணைந்து சுற்றுலாப் பயணம் செய்கிறார். 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது அவரும் சில போட்டிகளைக் கண்டுரசித்தார்.