அக்டோபர் முதல் நாள் காலை 10 மணிக்கு நவ சீனா நிறுவப்பட்ட வைரவிழா பெய்ஜிங் தியென் ஆன் மன் சதுக்கத்தில் நடைபெறும். தற்போது அதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் தயாராகியுள்ளன. இன்று முற்பகல் பிரமாண்டமான அணி வகுப்பு, பொது மக்கள் கலந்து கொள்ளும் ஊர்வலம் ஆகியவை நடைபெறும். இரவில் தேசிய விழாவைக் கொண்டாடும் கூதூகலக் கூட்டம் நடைபெறும். வண்ண வானவேடிக்கைகள் இரவு வானத்தை ஒளியூட்டும். ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும் இப்போது புறப்படும் இடத்தில் உள்ளனர்.
தியென் ஆன் மன் சதுக்கத்தில் பின்னணி வடிவத்தில் அரங்கேற்றும் 80 ஆயிரம் சிறார் மற்றும் இளஞர்கள் அனைவரும் அவர்களுக்கான இடத்தில் சேர்ந்துள்ளனர். 1300க்கும் மேற்பட்டோர் உருவாக்கிய இராணுவ இசைக் குழுவும் 2500 பேர் இடம் பெறும் பொது மக்களின் கூட்டுப் பாடல் குழுவும் 200 பல்கலைக்கழக மாணவர்கள் இடம்பெறும் தேசிய இன இசைக் குழுவும் சதுக்கத்தில் அவர்களது இறுதி அரங்கேற்றப் பயிற்சியை செய்தனர்.
கொண்டாட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெறுவதை உத்தரவாதம் செய்யும் வகையில் வானிலை, போக்குவரத்து, சுகாதாரம், பாதுகாப்பு ஆகிய வாரியங்கள் சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துவக்கக் தயாராகியுள்ளன. இன்று சுமார் 30 லட்சம் மக்கள் தியென் ஆன் மன் சதுக்கத்தில் கொண்டாட்ட விழாவில் கலந்து கொள்கின்றனர்.
|