அக்டோபர் முதல் நாள் காலை 8 மணிக்கு ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் வான்ச்சை ஜிங்ச்சுகிங் சதுக்கத்தில் தேசிய கொடி யேற்ற விழா நடைபெற்றது. ஹாங்காங் மக்கள் தாய்நாடு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடினர்.
சிறப்பு நிர்வாக பிரதேச அரசின் நிர்வாகச் செயலாளர் குவான் சென் லூங்கும் சுமார் 2500 விருந்தினர்களும் கொடி யேற்ற விழாவில் கலந்து கொண்டனர். தவிரவும் தேசிய விழாவுக்கான பான விருந்து நடைபெற்றது. இரவு குதிரைப் போட்டி மற்றும் வானவேடிக்கை அரங்கேற்றம் நடைபெறும்.
4000க்கும் மேற்படோர் கலந்து கொண்ட பான விருந்தில் நிர்வாகச் செயலாளர் குவான் சென் லூங் உரைநிகழ்த்தினார். பெருநிலப் பகுதியின் பொருளாதார அதிகரிப்பு, மாபெரும் உள்ளார்ந்த சந்தை ஆற்றல், கொள்கை ரீதியான ஆதரவு ஆகியவை ஹாங்காங்கிற்கு அரிதான வாய்ப்பு வழங்கியுள்ளன என்று அவர் கூறினார்.
|