அக்டோபர் முதல் நாள், அனைத்து சீன மக்களும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் சீனர்களும் மகழ்ச்சியுடன் கொண்டாடும் தேசிய விழா நாளாகும். அதே நாளின் காலையில் தலைநகரான பெய்ஜிங்கின் தியென் ஆன் மன் சதுக்கத்தில், நவ சீனாவின் வைர விழாவுக்கான பிரம்மாண்டமான கொண்டாட்டம், ராணுவ அணி வகுப்பு, பொது மக்களின் ஊர்வலம் ஆகியவவை நடைபெற்றன. சீனாவின் இதர இடங்களிலும், மக்கள் பல்வகை வடிவங்களில் இவ்விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களில் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டன. திபெத்தின் பல்வேறு துறையினர், தாய்நாட்டுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், பல மக்கள் தங்களது புதிய வீடுகளுக்கு குடிபெயர்ந்து, தேசிய விழாவைக் கொண்டாடி, "Zhongqiu" எனும் சீனப் பாரம்பரிய நடு இலையுதிர்கால விழாவை வரவேற்கின்றனர்.
சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில், 30ம் நாளிரவு நவ சீனாவின் வைர விழாவை கொண்டாடும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்று தெரிகிறது.
|