அக்டோபர் முதல் நாள், சீன மக்கள் அனைவருக்கும் ஒரு வேறுபட்ட மறக்க முடியாத நாளாகும் என்பது உறுதி.
1949ம் ஆண்டின் அக்டோபர் முதல் நாள், தலைநகர் பெய்ஜிங்கின் மையப் பகுதியிலுள்ள தியென் ஆன் மன் சதுக்கத்தில், நவ சீனா அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டதாக, காலஞ்சென்ற சீனத் தலைவர் மாவ் சே-துங் உலகிற்கு அறிவித்தார். 60 ஆண்டுகளுக்கு பிந்தைய அதே நாளில், பெய்ஜிங்கின் அதே இடத்தில், பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு மற்றும் பொது ஊர்வலம் உள்ளிட்ட கொண்டாட்டம் நடைபெற்றது.
பெய்சிங் நேரப்படி அக்டோபர் முதல் நாள் காலை 10மணிக்கு, தியென் ஆன் மன் சதுக்கத்தில், பீரங்கிகள் 60 முறை முழங்கியதன. அதேவேளையில், நவ சீனாவின் வைர விழாவுக்கான கொண்டாட்டம் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.
சீனா சொந்தமாக தயாரித்த "ஹோச்செ"எனும் சீருந்தில், தியென் ஆன் மன் பிரதேசத்தின் சின்சுய் பாலத்திலிருந்து சாங் ஆன் சாலை வழியாக, சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் அணி வகுப்பில் கலந்துகொண்ட படைப்பிரிவுகளைப் பார்வையிட்டார்.
தரையில், 30 படைப்பிரிவுகளும் வானில் 12 படைப்பிரிவுகளும், ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டன. எண்ணிக்கையிலும் தரத்திலும், இது அதன் வரலாற்றில் மிக உயர் பதிவாகியுள்ளது. தரைப் படைப்பிரிவுகளில் எடுத்துக்காட்டப்பட்ட 52 ராணுவ சாதனங்கள் அனைத்தும், சீனா சொந்தமாக தயாரித்த சாதனங்களாகும். முன்னெச்சரிக்கை விமானம், புதிய ரக வான் கண்காணிப்பு அமைப்புத் தொகுதி, புதிய தலைமுறைத் தகவல் தொழில் நுட்ப மயமாக்க போர் விமானம், ஆளில்லா உளவு வானூர்தி, செயற்கைக் கோள் செய்தித்தொடர்பு உள்ளிட்ட மிக முன்னேறிய தகவல் தொழில் நுட்ப மயமாக்க ராணுவ ஆயுதங்கள் மற்றும் சாதனங்களில் 90விழுக்காடு, முதல்முறையாக எடுத்தக்காட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தியென் ஆன் மன் சதுக்கம் அணி வகுப்பை பார்வையிடும் இடம் மட்டுமல்ல மகிழ்ச்சிகரமாக கொண்டாடும் இடமுமாக திகழ்கின்றது.
66 நிமிடங்கள் நீடித்த அணி வகுப்பு நடைபெற்ற பின் "தேசியக் கொடி","கொண்டாட்டம்","ஆண்டு எண்","தேசிய இனம்"ஆகிய வடிவத்தில் உருவாக்கப்பட்ட மரியாதை அணிகள் சதுக்கத்தில் நடத்த பொது மக்கள் கலந்து கொண்ட ஊரவலம் துவங்கியது. "செங்கொடி பாராட்டு"எனும் இசையுடன் 1949 இளைஞர்கள் ஐந்து நட்சத்திரங்கள் தைக்கப்பட்ட செங்கொடியை ஏந்தி ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினர். ஒரு லட்சம் பேர் 60 வண்ண வாகனங்களுடன் இணைந்து தியென் ஆன் மன் சதுக்கத்தின் மையத்தில் நடந்து சென்றனர். அப்போது சதுக்கத்திலுள்ள 80 ஆயிரம் இறார் மற்றும் இளைஞர்களும் சான் ஆன் சாலையில் மீண்டும் குடியரசின் முன்னேற்ற வரலாற்றுப் போக்கை வண்ண வாசகங்களாக வெளிக்காட்டினர். "தாய்நாட்டை பாராட்டுவோம்"என்ற பாடலை அவர்கள் பாடியதும் கொண்டாட்ட நடவடிக்கை உச்ச நிலையை எட்டியது.
இன்று மேலும் கூடுதலான சீன மக்கள் தொலைக் காட்சி, வானொலி மற்றும் இணையத்தின் மூலம் நேரடி ஒலி மற்றும் ஒளிபரப்பு செய்யப்பட்ட கொண்டாட்ட நடவடிக்களைக் கண்டு கேட்டு மகிழ்ச்சியடைந்தனர். பெய்ஜிங் மாநகரிலுள்ள வணிக அங்காடியில் தொலைகாட்சி மூலம் ஊர்வலத்தைக் கண்டு ரசித்த நகரவாசி Li de yue கூறியதாவது.
இன்று நடைபெற்ற கொண்டாட்ட நடவடிக்கைகள் மிகச் சிறப்பானவை. மக்களைப் பொறுத்தவரை இது மிகவும் ஊக்கமளிக்கும் விடயமாகும். அணி வகுப்பில் காணப்பட்ட சாதனங்களைப் பார்த்தால் இவையனைத்தும் நவீனமயமானவை. உயர் அறிவியல் தொழில் நுட்பம் மிக்கவை. உலகிற்கு இது செல்வாக்கு ஏற்படுத்தும். மக்களின் பெருமையை இது அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
வெளிநாடுகளில் வாழும் மிகப் பல சீனர்கள் தாய்நாட்டின் செழுமை மற்றும் வலிமையைக் கண்டு மிகவும் ஊக்கமடைந்துள்ளனர். கனடாவில் வாழ்கின்ற சீனர் chen wan hua என்பவர் முன்பு 50வது தேசிய கொண்டாட்ட நடவடிக்கைகளில் கலந்து கொண்டவர். பார்வையாளர் பிரதிநிதியாக மீண்டும் அழைக்கப்பட்ட அவர் இன்றைய நவ சீனாவின் 60வது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.
கொண்டாட்ட நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டதற்கு மிகவும் பெருமையடைந்தேன். கடந்த சில ஆண்டுகளில் உள்நாட்டு வளர்ச்சி மிகச் சிறப்பானது. சீனா உலகின் அமைதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு முதலிய துறைகளில் மேலும் முக்கிய பங்கு ஆற்றலாம் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகள், சீனாவின் ஒட்டுமொத்த ஆற்றல் விரைவாக வளர்ந்த 10 ஆண்டுகளாகும். சீன இராணுவம் வளர்ச்சியடைந்த முக்கிய காலமும் ஆகும். இதனால் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட இராணுவ அணிவகுப்பு, மிக அதிகமான கவனம் ஈர்த்துள்ளது. இந்த முறை இராணுவ அணிவகுப்பின் அளவு மற்றும் சாதனங்கள், சீன இராணுவத்தின் நவீனமயமாக்கக் கட்டுமானத்திலான மாற்றங்கள் மற்றும் வளர்ச்சியைக் காட்டின என்று சீன இராணுவ அறிவியல் கழகத்தின் ஆய்வாளர்கள் Luo Yuan கருத்து தெரிவித்தார்.
அளவு மற்றும் எண்ணிக்கை ரக இராணுவப் படையிலிருந்து, தரம் மற்றும் ஆற்றல் ரக இராணுவப் படையாக சீனப் படை மாறிக் கொண்டிருப்பதை இது காட்டியது. அத்துடன், இராணுவ நவீனமயமாக்கக் கட்டுமானத்தில், இயந்திர மயமாக்கத்திலிருந்து, தகவல் தொழில்நுட்ப மயமாக்கமாக மாறியது, படைவீரர் போரிட்டதிலிருந்து, படைவீரர்களும் இயந்திரங்களும் ஒன்றிணைந்து போரிடுவதற்கு மாறியது ஆகிய இரண்டு முன்னேற்றங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று Luo Yuan கூறினார்.
இராணுவ அணிவகுப்பு, சீன இராணுவத் துறையின் வெளிப்படைத் தன்மையைக் காட்டியது. சர்வதேசச் சமூகத்துக்கு சீன இராணுவம், வெளிப்படையாக இருப்பதை தவிர, எமது மக்களுக்கும் சீன இராணுவ கருத்து மற்றும் ஆற்றலைக் காட்ட வேண்டும் என்பதே அணிவகுப்பின் இலக்காகும் என்று Luo Yuan கூறினார்.
மனிதர் முதன்மை என்ற கண்ணோட்டம், நவ சீனாவின் வைர விழாவுக்கான ஊர்வலத்தின் தனிச்சிறப்பாகும். அது, மக்களின் ஆதரவு பெற்று ஊக்கமூட்டியது. எதிர்காலத்தில் சீனா தொடர்ந்து சீராக வளர்வதற்கு, அது ஊக்குவிப்புப் பங்கு ஆற்றியது என்று அவர் கூறினார்.
சீன மக்கள், நாட்டின் வைர விழாவின் பெருமையை உணர வேண்டும். கடந்த 60 ஆண்டுகளில், வறுமையான வலிமையற்ற நாட்டிலிருந்து ஒரு முக்கிய பெரிய நாடாக மாறி, மாபெரும் மறுமலர்ச்சிப் பாதையில் சீனா நடை போட்டுள்ளது. வெளிப்புற உலகில் சீனாவின் செல்வாக்கும் மென்மேலும் தெளிவாகியுள்ளது. சீன அரசு, கடந்த 60 ஆண்டுகளின் சாதனைகளையும் அனுபவங்களையும் மீளாய்வு செய்து வருகிறது. உலகம், சீனாவின் எதிர்காலத்தை எதிர்பார்த்து வருகிறது.
சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ், தியென் ஆன் மன் வாயில் கோபுரத்தில் உறுதிபடக் கூறியதாவது,
தாய்நாட்டை சீராகக் கட்டியமைக்க, சீன மக்களுக்கு நம்பிக்கையும் திறனும் உண்டு. உலகில் சிறப்புப் பங்காற்ற, சீன மக்கள் நம்பிக்கையையும் திறனையும் கொள்கின்றனர் என்று அவர் கூறினார்.
|