• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-02 18:11:29    
சீனத் தேசிய விழாக் கொண்டாட்ட நடவடிக்கை

cri
நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நடவடிக்கைகள், அக்டோபர் முதல் நாள் பெய்ஜிங் மாநகரின் தியன் ஆன் மென் சதுக்கத்தில் நடைபெற்றன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்கள், இந்நடவடிக்கைகளை வெகுவாகப் பாராட்டினர்.

சிங்கப்பூரிலிருந்து வந்த சீன தொழில் முனைவோரில் ஒருவரான Du Zhiqiang அன்று முற்பகல் நடைபெற்ற இராணுவ அணி வகுப்பு மற்றும் பொது மக்களின் ஊர்வலத்தை நேரில் பார்வையிட்டார்.

எனது தாய்நாட்டில் தலைக்கீழான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதைக் கண்டேன். இதனால் சீன மக்களாகிய நாங்கள் மனப்பூர்வமாக மகிழ்ச்சியடைகின்றோம். சீனா மேலும் செழுமையாக வளர்வதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்று அவர் கூறினார்.

இந்த இராணுவ அணி வகுப்பு, கம்பீரமாக இருந்தது. இது, சீனாவின் ஆற்றலையும் புகழையும் வெளிக்காட்டியது என்று சீனாவின் குவாங்தூங் மாநிலத்தின் தொழில் முனைவோர் Wu Zhenming கூறினார்.

அன்றிரவு நடைபெற்ற கலை நிகழ்ச்சியை, சீனாவுக்கான சௌதி அரேபிய தூதர் Abdullah Alawwad பார்வையிட்டார்.

இது, தலைசிறந்த மாபெரும் விழாவாகும். சீன அரசு மற்றும் மக்கள் பெற்றுள்ள இத்தகைய பெரிய சாதனைகளுக்கு, நான் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். எதிர்காலத்தில், சீனா மேலும் பெரிய முன்னேற்றங்களைப் பெற்று, மேலும் செழுமையாக மாற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.