• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-02 19:39:54    
இந்திய நாளேடு சீனாவுக்கு புகழாரம்

cri
கடந்த 20 ஆண்டுகளில் 30 கோடி மக்களை ஏழ்மையிலிருந்து சீனா விடுவித்திருப்பதாக இந்திய நாளேடு புகழாரம் சூட்டுகிறது. மக்கள் சீனக் குடியரசு உதயமாகி 60 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதை குறித்து சென்னையிலிருந்து வெளிவரும் டைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கில நாளேடு, பார்டி டைம் என்ற தலைப்பில் இன்று வெள்ளிக்கிழமை தலையங்கம் வெளியிட்டிருக்கிறது. மக்களாட்சி என்பது எங்களின் இலக்கு. ஆனால் நாடு நிலைபெற்று விளங்கிட வேண்டும் என்ற தெங் சியாவ் பிங் அவர்களின் கூற்றை இன்றைய சிந்தனையாக அந்த நாளேடு அச்சிட்டுள்ளது. ஒரு நாட்டின் வரலாற்றுப் பாதையில் 60 ஆண்டுகள் என்பது நீண்டகாலம் எனக் கூறிவிட முடியாது. ஆனால் சீனாவையும் அந்நாட்டு மக்களையும் பொறுத்தவரை மாபெரும் மாற்றத்தை உருவாக்கிய புத்தம்புதிய அனுபவமாகும் என்று தலையங்கம் பெருமைப்படுகிறது. 1949 அக்டோபர் முதல் நாளன்று மக்கள் சீனக் குடியரசை நிறுவிய தலைவர் மாவ்சேதுங் இன்று மக்கள் சீனத்தை கண்ணாரக்காண நேரிட்டால், அது அடைந்திருக்கும் மாற்றத்தை கண்டு, அபார வளர்ச்சியை கண்டு பூரித்துப் போவார். இன்று சீனா அடைந்திருக்கும் வளர்ச்சிக்கும் வளத்திற்கும், 1978 யில் தெங் சியாவ் பிங் முன்வைத்த வெளிநாட்டு திறப்புக் கொள்கை, பொருளாதார சீர்திருத்தம் ஆகியவை தொடர்பான கொள்கைகளே அடிப்படை என்றால் மிகையாகாது என்கிறது தலையங்கம். கல்வி, நலவாழ்வு, தொழில் ஆகியவற்றிற்கு சீனா அளித்துவரும் முக்கியத்துவத்தை இந்தியர்களாகிய நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்று முத்தாய்ப்பாக தெரிவிக்கிறது டைம்ஸ் ஆப் இந்தியாவின் தலையங்கம்.