நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில் பெற்ற மாபெரும் சாதனைகள் பற்றி, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளின் செய்தியேடுகள் செய்திகளை வெளியிட்டன.
கடந்த 60 ஆண்டுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சீனப் பொருளாதாரம் வேகமாகவும் நிதானமாகவும் அதிகரித்துள்ளது. இதுவரை, சீனா உலகில் முக்கிய பொருளாதார நாடாக மாறியது என்று ஆப்கானிஸ்தானில் மிகப் பெரிய ஆங்கில மொழி செய்தியேடு observations சனிக்கிழமை வெளியிட்ட கட்டுரை கூறியது.
கடந்த 60 ஆண்டுகளில் சீன மக்கள் ஆராய்ச்சி மற்றும் சீர்திருத்தப் பாதையில் முன்னேறி, பல வளர்ந்த நாடுகளில் சில நூறு ஆண்டுகாலமாக பெற்ற னேற்றங்களை நிறைவேற்றியுள்ளனர். எதிர்காலத்தில், சீன தேசம் மாபெரும் மறுமலர்ச்சிப் பாதையில் நுழையும் என்று அமெரிக்காவின் Chinese Biz News எனும் செய்தியேடு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
சீன மக்கள் குடியரசின் தகுநிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இத்தகையச் சாதனை பெற முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவரிண் எண்ணிக்கை 60 ஆண்டுகளுக்கு முன்பே மிக மிக குறைவு என்று பிரிட்டன் Financial Times எனும் செய்தியேடு 2ம் நாள் வெளியிட்ட தலையங்கம் சுட்டிக்காட்டியது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையால், சீனாவின் பெரும் உள்ளார்ந்த ஆற்றல் வெளிப்பட்டுள்ளது என்று இத்தலையங்கம் கூறியது.
|