திபெத்தில் சீன மற்றும் வெளிநாட்டு பயணிகளின் பயணம்
cri
அக்டோபர் திங்கள் முதல் நாள் முதல் 3ம் நாள் வரை, ஒரு இலட்சத்து 10 ஆயிரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் திபெத்தில் பயணம் மேற்கொண்டனர். திபெத் சுற்றுலா துறை, சீரான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தியது. 3ம் நாள் 40 ஆயிரம் பயணிகள் திபெத்தில் பயணம் மேற்கொண்டனர். இது வரலாற்றில் மிக அதிகமாக பதிவாகும். தற்போது, தேசிய விழா விடுமுறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளைத் திபெத்தின் பல்வேறு சுற்றுப்பயண நிறுவனங்களும் சுற்றுப்பயண வாகனக் கூட்டு நிறுவனங்களும் முழுமூச்சுடன் வரவேற்கின்றன. திபெத்தில் பயணிகளின் சுமூகமான பயணத்துக்கு உத்தரவாதம் அளிக்க, சுற்றுப்பயண நிறுவனங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
|
|