நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவை சீன மக்கள் அனைவரும் கொண்டாடும் அதேவேளையில் வெளிநாடுகளில் வாழ்கின்ற சீனரும் சகநாட்டவர்களுடன் இணைந்து தாய்நாட்டின் 60வது ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாடினர். தொலைக்காட்சி மூலம் இராணுவ அணி வகுப்பை கண்டு நாட்டின் வலிமையை எண்ணி மிகவும் பெருமையடைந்துள்ளனர். இது மட்டுமல்ல பல்வகை கொண்டாட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டனர்.
ராணுவ அணிவகுப்பு விழா
ஜெர்மனியின் பெர்லினில் வாழ்கின்ற சீனர் லியூ சு பாஃன் தம்பதியரின் தேசிய விழா கொண்டாட்டத்தை இங்கே கூறுகின்றோம். ஜெர்மனி மற்றும் பெய்ஜிங் நகரங்களின் நேரத்தில் இடைவெளி 6 மணி நேரம். இருந்தாலும், அவர்கள் பெர்லின் நேரப்படி அக்டோபர் முதல் நாள் அதிகாலை சரியான நேரத்தில் பெய்ஜிங்கில் நடைபெற்ற இராணுவ அணி வகுப்பைக் கண்டு மகிழ்ந்தனர். பெர்லின் நேரம் அக்டோபர் முதல் நாள் பிற்பகல் சீன தேசிய விழா கொண்டாட்ட இரவு நேர குதூகல நிகழ்ச்சிகளை பார்க்க பல நண்பர்களை வீட்டுக்கு அழைத்தனர். நான் கணவருடன் தியென் ஆன் மன் சதுக்கத்தில் நடைபெற்ற இராணுவ அணி வகுப்பைக் கண்டு ரசித்தேன். இப்போது எங்கள் வீட்டில் நண்பர்களுடன் இணைந்து தேசிய விழாவைக் கொண்டாடும் குதூகல நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கின்றோம். எங்கள் மகத்தான தாய்நாடு என்றுமே செழுமையடைய நாங்கள் உளமார வாழ்த்துகின்றோம் என்று லியூ சு பாஃன் அம்மையார் கூறினார்.
தியென் ஆன் மன் சதுக்கத்தில் இரவு நேரத்தில் நடைபெற்ற குதூகல நிகழ்ச்சிகள்
வெளிநாடுகளில் வாழ்கின்ற மிக பல சீனரும் தொலைக்காட்சி மூலம் இராணுவ அணி வகுப்பை பல முறை கண்டு ரசித்தனர். இந்தியாவில் உணவகம் நடத்துகின்ற திரு சியூ கோ லியாங் கூறியதாவது. இன்றைய இராணுவ அணி வகுப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. இதில் வான், கடல் மற்றும் தரைப் படைப்பிரிவுகள் கலந்து கொண்டன. நான் இப்போது தான் தாய் நாட்டிலிருந்து திரும்பி வந்தேன். என்னுடைய பிறந்த ஊர் உள்ளிட்ட பல இடங்களில் நான் பயணம் மேற்கொண்டேன். இவ்வளவு செழுமையான சீனாவை நான் முன்பு பார்க்க வில்லை. சீன-இந்திய நட்புறவு என்றுமே நிலவ வேண்டும். இது எங்களுக்கு நன்மை தரும் என்று அவர் கூறினார். இராணு அணி வகுப்பு இதர கொண்டாட்ட நடவடிக்கைகள் ஆகியவை தவிர, 5 நட்சத்திரங்கள் கொண்ட சீன செங்கொடியை ஏற்றுவது வெளிநாடுகளில் வாழ்கின்ற சீனர் தாய்நாட்டின் பிறந்த நாளை கொண்டாடும் முக்கிய வடிவங்களில் ஒன்றாகும். சீன தேசிய கொடியை ஏற்றுவது அமெரிக்காவில் வாழ்கின்ற சீனரை பொறுத்தவரை நாட்டுபற்றை எடுத்துக்காட்டும் வழிமுறையாகும் என்று அமெரிக்காவில் வாழ்கின்ற சீன சகநாட்டவர் சங்கத்தின் தலைவர் ஹோ சியௌ குவெ அம்மையார் தெரிவித்தார்.
1 2 3 4
|