நவ சீனா நிறுவப்பட்ட கடந்த 60 ஆண்டுகளில் சீனாவின் சமூக பொருளாரா வளர்ச்சியில் மாபெரும் சாதனைகள் பெறப்பட்டுள்ளன. மக்களின் வாழ்க்கை தரம் பெருமளவில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் உணவு மற்றும் உடை பிரச்சினையில்லாத ஓரளவு வசதி கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சி நிறைவேறியுள்ளது என்று சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் வழங்கிய தகவல்கள் கூறுகின்றன.
1949ம் ஆண்டில் கிராமப்புறத்தில் வாழ்கின்ற மக்களின் சராசரி ஆண்டு வருமானம் 50 யுவானுக்கு கீழ் இருந்தது. 2008ம் ஆண்டு அவர்களின் சராசரி ஆண்டு வருமானம் 4700 யுவானை தாண்டியது. கிராமப்புறத்தில் வறிய மக்கள் தொகை 1978ம் ஆண்டில் இருந்த 25 கோடியிலிருந்து 2007ம் ஆண்டில் ஓரு கோடியே 70 லட்சமாக குறைந்தது என்று சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் ச்சான் பிங் விவரித்தார்.
|