நவ சீனா நிறுவப்பட்ட பிறகு, சீனாவில் சிறிய நகரங்களின் கட்டுமானம் முன்னென்றும் கண்டிராத வளர்ச்சியை பெற்றது. அவற்றின் எண்ணிக்கை 1954ம் ஆண்டில் 5,400இலிருந்து 2008ம் ஆண்டில் சுமார் 20ஆயிரமாக அதிகரித்தது. கிராமப்புறப் பொருளாதாரத்தை செழுமைப்படுத்துவது, விவசாயிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, பொதுச் சேவை வழங்குவது ஆகியவற்றின் முக்கிய இடமாக, இத்தகைய நகரங்கள் திகழ்கின்றன.
சீனாவில் பெரிய மற்றும் நடுத்தர நகரங்கள் ஒருங்கிணைந்து வளர்ச்சியடைந்த நகர அமைப்புமுறை உருவாகியுள்ளது. ஒரு நகர் அல்லது பல நகரங்களை மையமாகக் கொண்டு, பல நகரங்களை கூட்டாக கொண்ட நகரக்குழுக்களும், முக்கிய பொருளாதார அதிகரிப்பு மையங்களாக மாறியுள்ளன. இவை, சர்வதேசப் பொருளாதாரப் போட்டியில் பங்கேற்கும் முக்கிய பிரதேசமாகவும் மாறியுள்ளன.
|