• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-07 16:16:35    
60வது பிறந்த நாளுக்கான கொண்டாட்டம்

cri

வானை எட்டுமான மேளம் முழங்க இனிமையான பாடல்களுடன் சீனாவின் பல்வேறு தேசிய இன மக்கள் அந்தந்த இனங்களின் தனிச்சிறப்பியல்புகளுடன் தாய்நாட்டின் 60வது ஆண்டு நிறைவு நாளை கொண்டாடினர். அக்டோபர் முதல் நாள் குவான்சி சுவான் இன தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள 1041 சிறுப்பான்மை இன கிராமங்கள் ஒரே நேரத்தில் சீன தேசிய கொடியை ஏற்றி நாட்டுப் பண்ணை பாடி சீனாவின் 60வது பிறந்த நாளை கொண்டாடின.
 

அக்டோபர் முதல் நாள் தியென் ஆன் மன் சதுக்கத்தில் நடைபெற்ற பொது ஊர்வலம்

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் வாழ்கின்ற பல்வேறு இன மக்கள் ஆடி பாடி தாய்நாட்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். உள்மங்கோலியாவில் வாழ்கின்ற ஏரன்சுன் இன முதியோர் துங்முச்சோவுக்கு வயது 60. தேசிய விழாக் கொண்டாடும் நடவடிக்கையில் கலந்து கொண்ட அவரது வீட்டில் வண்ண தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதன பெட்டி, துணி துவைக்கும் கருவி, தொலைபேசி போன்ற நவீன வசதிகள் இருக்கின்றன. அவரது வாழ்க்கை நவீன வசதிகளுடன் இணைந்து காட்சியளிக்கின்றது. எங்கள் ஏரன்சுன் வேட்டையாடுவோரின் வாழ்க்கை ஓரளவு வசதி கொண்ட வாழ்க்கையாகியுள்ளது. மீண்டும் 60 ஆண்டுகள் வாழ விரும்புகின்றேன். எங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறப்பாக மேம்படவும் எங்கள் நாடு மேலும் செழுமையடையவும் வாழ்த்துகின்றேன் என்று அவர் கூறினார்.
 
நின்சியா குவேய் இன தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் நீன்ச்சுவானின் சிங்சான் குடியிருப்பு குவேய் மற்றும் ஹென் இன மக்கள் கலந்து வாழும் இடமாகும். அக்டோபர் முதல் நாளன்று குடியிருப்பு வாசிகள் நாட்டின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு 2009 சீன கொழுக்கட்டைகளை வேகவைத்தனர். 58 வயதான பெண்மனி மா க்கெய் ஹா கூறியதாவது. குடியிருப்பில் நாங்கள் குவேய் மற்றும் ஹென் இன மக்கள் சகோதரர்களை போல் பழகுகின்றோம். யாருக்காவது எதாவது தேவைப்பட்டால் ஒருவொருக்கொருவர் உதவுகின்றோம். ஹென் இன மக்கள் குவேய் இன மக்களுக்கு மதிப்பு அளிக்கின்றனர் என்றார் அவர்.
 
தேசிய விழாவை கொண்டாடும் இவ்வேளையில் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் உருமுச்சியின் வணிக மையங்களில் ஒவ்வொரு கடை வாசலிலும் 5 நட்சத்திரங்கள் கொண்ட சீன செங்கொடி தொங்கவிடப்பட்டுள்ளன. அலங்கரை சிவப்பு விளக்குகள் பூக்கள் ஆகியவற்றால் உருமுச்சி நகர் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மகிழ்ச்சியில் சீனா முழுவதும் மூழ்கியுள்ளது.