இவ்வாண்டு நவ சீனா நிறுவப்பட்ட 60வது நிறைவாகும். தேசிய விழா கொண்டாடும் போது நிலா விழாவும் கொண்டாடப்படுகின்றது. 8 நாட்கள் நீடிக்கும் தேசிய விடுமுறை நாட்களில் சீன மக்கள் உடன்பிறப்புகளுடன் இணைந்து விழாவை கொண்டாடுவது தவிர, சுற்றுலாப் பயணம் பல்வகை பண்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஆர்வத்துடன் கலந்து கொள்வது விடுமுறை நாட்களின் பொழுது போக்கின் முக்கிய அம்சங்களாகும்.
வரலாற்று நாடகமான "மறுமலர்ச்சி பாதை"செப்டம்பர் திங்களின் பிற்பகுதி முதல் இதுவரை பெய்ஜிங் மக்கள் மகாமண்டபத்தில் 13 முறை அரங்கேற்றப்பட்டது. நவ சீனாவின் வைரவிழாவுக்கான சிறப்பு படைப்பு என்ற முறையில் இந்த நாடகம் 150 நிமிடங்களில் 1840 முதல் 2009ம் ஆண்டு வரையான 169 ஆண்டு காலத்தில் சீன தேசத்தின் வளர்ச்சி வரலாற்றை பாராட்டுகின்றது. குங் அம்மையார் 8 வயதான மகனுடன் இந்த நாடகத்தை கண்டு ரசித்தார்.
அவர் கூறியதாவது. இந்த நாடகத்தை கண்டு பெருமிதமடைந்தேன். சீன தேசம் சந்தித்த அனைத்து வரலாற்று நிகழ்ச்சிகளும் இந்நாடகத்தில் சேர்க்கப்பட்டிந்தன. இதை பார்த்தபோது சீன வரலாற்றை மீண்டும் மீளாய்வு செய்ய முடிகிறது. சீன மக்களின் பொற்பேற்கும் கடப்பாடு மிகவும் முக்கியமானது என்றார் அவர்.
சீன தேசிய விழா கொண்டாட்ட நாட்களில் பெய்சிங் மாநகரில் பல்வகை கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. சீனாவின் புகழ் பெற்ற இயக்குநர் ச்சான் யீ மோ இயக்கிய துராந்தோ நாடகம், தலைசிறந்த பழமை வாய்ந்த நாடகங்கள் அனைத்தும் ரசிகர்களால் வரவேற்கப்படுகின்றன. தவிர பொது மக்கள் கலந்து கொள்ளும் 39 பண்பாட்டு நடவடிக்கைகளும் 80க்கும் அதிகமான பொது நூலக நடவடிக்கைகளும் நகரவாசிகளின் தேசிய விழா விடுமுறை நாட்களின் பொழுதுபோக்கு அம்சங்களை செழுமைப்படுத்தின.
பெய்ஜிங் மாநகர பண்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் குவான் ச்சு அம்மையார் கூறியதாவது. சீனரின் பாரம்பரிய பண்பாட்டில் எண் 60 மிகவும் முக்கியமானது. பண்பாட்டுத் துறையை பொறுத்தவரை கடந்த 60 ஆண்டுகளில் மக்களால் வரவேற்கப்படும் மிக சிறந்த பல பண்பாட்டுப் படைப்புகளை நாங்கள் உருவாக்கினோம். இந்த படைப்புகள் 60வது ஆண்டு என்ற எண்ணின் தொடர்புடன் மீண்டும் ஒட்டுமொத்தமாக ஒரு தேசத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டியுள்ளன. மக்களை சென்றடைந்துள்ள தகவல் அளவு முன்பு கண்டிராதது என்று அவர் கூறினார். கலைநிகழ்ச்சிகளை மக்கள் முகம் மலர்ந்து மகிழ்ச்சியோடு கண்டுரசிப்பது குறிப்பிடத்தக்கது.