இவ்வாண்டில்,40லட்சத்துக்கு அதிகமான பயணிகள் மற்றும் ஹஜ் திருப் பயணிகள், திபெத்தின் போத்தலா மாளிகைக்கும் பல்வேறு அருங்காட்சியகங்களுக்கும் சென்றனர். வரலாற்றில் இவ்வெண்ணிக்கை அதிகமாகும்.
1999ம் ஆண்டு முதல், திபெத்தின் தொல் பொருள் பாதுகாப்பு வாரியங்களுக்கும், அருங்காட்சியகங்களுக்கும் சென்றோரின் எண்ணிக்கை, ஏறக்குறைய 10 லட்சத்திலிருந்து, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றது.
கடந்த ஆண்டுகளில், சீன அரசு, மாபெரும் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, திபெத்தின் தொல் பொருள் கட்டிடங்களைப் பாதுகாத்து செப்பனிடுவதே இதற்கு முக்கிய காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
|