• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-13 17:01:37    
சீன அரசு மீதான பிரிட்டன் நாடாளுமன்றத்தின் உறுப்பினரின் பாராட்டு

cri

இவ்வாண்டின் செப்டம்பர் திங்களில் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் குழு, 12ம் நாள் இலண்டனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. திபெத்தின் பொருளாதாரம், பண்பாடு மற்றும் சமூகத் துறைகளின் வளர்ச்சியை முன்னேற்றுவதில், சீன அரசு மேற்கொண்ட முயற்சிகளை, இவ்வறிக்கை பாராட்டியது.

கடந்த சில ஆண்டுகளில், சீன நடுவண் அரசின் ஆதரவில், திபெத்தின் சமூகம், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில், திபெத் மாபெரும் சாதனைகளை பெற்றுள்ளது. திபெத் மக்களின் வாழ்க்கை நிலையும் பெரிதும் மேம்பட்டுள்ளது. தவிர, திபெத்துக்கான கல்வி ஆதரவை சீன அரசு வலுப்படுத்தியது என்று இவ்வறிக்கை கூறியது.

தற்போது, திபெத் மரபுவழி புத்தமதம் உள்ளிட்ட பல்வகை மத நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை, 1700யை தாண்டியது. திபெத் மக்கள் மதச் சுதந்திர உரிமையை அனுபவிப்பதை இது முழுமையாக எடுத்துக்காட்டியது என்று இவ்வறிக்கை கூறியது.

தவிர, மனித உரிமையை பாதுகாப்பதில் சீனா பெற்றுள்ள முன்னேற்றங்களையும் இவ்வறிக்கை பாராட்டியது.