• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-15 16:22:16    
திபெத்தில் மலையேற்ற நடவடிக்கை

cri

சீனாவின் தென்மேற்கு எல்லை பிரதேசத்தி்லுள்ள அழகான மார்மமான பீடபூமியில், உலகில் புகழ்பெற்ற ஜொல்மோ லுங்மா மலைசிகரமும், உலகில் மிக பெரிய யாருசாம்பு பள்ளத்தாக்கும் உள்ளன. இவ்விடங்களும் திபெத் தான். சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம், எண்ணற்ற மலைத்தொடர்கள் மற்றும் பனிமலைகளைக் கொண்டதால், மலையேறுவோர் பேரார்வத்துடன் செல்ல விரும்பிய இடமாகும். இதுவரை, ஜொல்மோ லுங்மா, சோவொயூ, சிசியாபாங்மா உள்ளிட்ட 46 புகழ்பெற்ற மலை சிகரங்கள், திறந்து வைக்கப்பட்டுள்ளதால், இச்சிகரங்களில் பயணிகள் ஏறிச் சென்று மகிழலாம்.

திபெத் மலை ஏறுதல் சங்கத்தின் தலைமைச் செயலாளர் சாங் மிங் சிங் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது பேசுகையில், எழில் மிக்க மலை வளத்தைக் கொண்ட திபெத், மலையேறுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிபந்தனையை இயற்கையாகவே பெற்றிருக்கிறது. திபெத்தில், 5 மலைகளின் உயரம், கடல் மட்டத்திலிருந்து 8000 மீட்டரைத் தாண்டுகின்றன. சுமார் 70 மலைகளின் உயரம், கடல் மட்டத்திலிருந்து 7000 மீட்டருக்கு மேலாகும். கடல் மட்டத்திலிருந்து 6000 மீட்டருக்கு மேல் உயரமான மலைகளின் எண்ணிக்கை, ஆயிரக்கணக்கான இருக்கின்றன. அவர் அறிமுகப்படுத்தியதாவது:

ஏறிச்செல்ல திறந்துவைக்கப்பட்ட இந்த 46 மலைசிகரங்களில், கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரமான மலைகள் மற்றும் உலகில் மிக உயரமான எவரெங்ட் சிகரம் முதலியவை இடம்பெறுகின்றன என்று சாங் மிங் சிங் கூறினார்.
திபெத்திலுள்ள மலை சிகரம் பற்றி குறிப்பிடுகையில், அனைவரும் ஜொல்மோ லுங்மா சிகரத்தை முதலில் நினைகின்றனர். உலகில் மிக உயரமான இச்சிகரம், சீனா மற்றும் நேபாளத்தின் எல்லை பிரதேசத்திலுள்ள இமயமலையைச் சேர்ந்தது. அதன் உயரம், கடல் மட்டத்திலிருந்து 8848 மீட்டராகும். இப்பிரதேசத்திலுள்ள மற்றொரு புகழ்பெற்ற மலையான சோவொயூ சிகரம், உலகில் 6வது உயரமான சிகரமாக திகழ்கிறது. அதன் உயரம், கடல் மட்டத்திலிருந்து 8201 மீட்டராகும். கடல்

மட்டத்திலிருந்து 8000 மீட்டருக்கு மேல் உயரான மலைகளில் மிகவும் எளிதாக ஏறிச் செல்லக்கூடிய சிகரமாக இது உள்ளது. சிசியாபாங்மா சிகரம், திபெத்தில் புகழ்பெற்ற மலையாகவும் உள்ளது. இதன் சுருகில், மூன்று மலை சிகரங்கள் உள்ளன. செங்குத்தான அபாயமான மலைப்பகுதி சீரற்ற வானிலை மாற்றம் ஆகியவை, அதன் தனிச்சிறப்பியல்புகளாகும். சாங் மிங் சிங் எமது செய்தியாளரிடம் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளில், பெரும்பாலான வெளிநாட்டு மலையேறுவோர், கடல் மட்டத்திலிருந்து 8000 மீட்டருக்கு மேல் உயரமான மலை சிகரங்களைத் தெரிவு செய்து ஏறினர். பொதுவாக வசந்தகாலத்தில் அவர்கள் ஜொல்மோ லுங்மா சிகரத்தில் ஏறுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.