• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-19 16:57:06    
பன்றியிலிருந்து மூல உயிரணுக்கள் - I

cri

பன்றி என்று சொன்னாலே பீதியடையும் அளவுக்கு சளிக்காய்ச்சல் எ நச்சுயிரி உலகை உருட்டிப் போட்டிருக்கிறது. பன்றிகளுக்கு வருகின்ற மூச்சுக்குழல் நோய் படிப்படியாக மனிதருக்கு தொற்ற தொடங்கியது. ஆனால் தொடக்கத்தில், இந்நோய்க்கு ஆளான மனிதரிடமிருந்து பிற மனிதர் யாருக்கும் இது தொற்றவில்லை. எனவே நோய் பரவும் வேகம் மிகவும் குறைவாக இருந்தது. தற்போது மெக்ஸிகோவில் பரவிய எச்1என்1 நச்சுயிரி, மனிதரிடமிருந்து பிற மனிதருக்கு தொற்றி மிகவிரைவாக நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நோய் பரவிக்கொண்டே இருந்தால், அடுத்தாக சளிக்காய்ச்சலுக்கான வெளிப்படையான நோய் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தும்மல், சோர்வு, தொண்டைவலி, தலைவலி என எதுவுமேயின்றி மனிதருக்குள் எச்1என்1 நச்சுயிரி தொற்றும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். சூழ்நிலை இவ்வாறிருக்க, stem cells அதாவது மூல உயிரணுக்களை உற்பத்தி செய்கின்ற புதிய கருவியாக பன்றிகள் மாறியுள்ளதை உறுதிபடுத்தியுள்ள ஓர் ஆய்வு, மனிதகுலம் பன்றிகளால் அடையப்போகும் பல்வேறு நன்மைகளை சுட்டிக்காட்டுகின்றது. இந்த ஆய்வை பற்றி அறிவதற்கு முன்னால், stem cells அதாவது மூல உயிரணுக்கள் பற்றிய சிறு அறிமுகம்.

"நான் வளர்கிறேன் அம்மா" என்று ஒரு குழந்தை மழலை மொழியில் கூறுகின்றபோது தனது உடலிலுள்ள பல்வகை cells அதாவது உயிரணுக்களின் வளர்ச்சியால் தான் இது சாத்தியமாகிறது என்று அதற்கு தெரிவதில்லை. ஒவ்வொரு நாளும் நம்மிடமுள்ள உயிரணுக்களில் பல இறந்து கொண்டிருக்கின்றன. அவற்றை ஈடுசெய்ய பல புதிய உயிரணுக்கள் உருவாகின்றன. உயிரணுக்கள் வளர்ந்து பிரிவதை தான் வளர்சிதை மாற்றம் என்கிறோம். உயிரணுக்கள் உருவாக மூல உயிரணுக்கள் காரணமாக அமைகின்றன. மூல உயிரணுக்களுக்கு தனிதன்மையான ஆற்றல்கள் உண்டு. இவை தன்னைத்தானே புதுப்பித்து கொண்டு, எத்தனை முறை வேண்டுமானாலும் வளர்சிதை மாற்றத்திற்கு அதாவது உயிரணு பிரிவுக்கு உள்ளாகி, தேவையான உயிரணுக்களை உருவாக்கும் ஆற்றல் கொண்டவை. மூல உயிரணுக்கள் தாங்கள் கொண்டுள்ள ஆற்றல்களுக்கு ஏற்ப செயல்பாடுகளில் வேறுபாடுகளை கொண்டுள்ளன. அவற்றிற்கேற்ற செயல்பாடுகளையே தொடர்ந்து மேற்கொண்டும் வருகின்றன.

மூல உயிரணுக்களை அவை கொண்டிருக்கும் ஆற்றல்களின் அடிப்படையில், முழு ஆற்றலுடையவை, பல ஆற்றலுடையவை, பன்முக ஆற்றலுடையவை, ஓர் ஆற்றலுடையவை என நான்கு வகைகளாக கொள்ளலாம். முதலாவதாக முழு ஆற்றலுடையவை. இவை புதிய உயிரணுக்களை அல்லது அவற்றின் பகுதி உயிரணுக்களை உற்பத்தி செய்யக்கூடியவை. இவை பெண்ணின் கரு முட்டையும், விந்து உயிரணுவும் இணைந்து உருவாகின்றன. அதுபோல வளமடைந்த கரு முட்டையின் முதல் சில பிரிவுகளிலும் உருவாகின்றன. கருப்பையிலுள்ள மூல உயிரணுக்களின் முளையும், கருப்பைக்கு வெளியிலுள்ள மூல உயிரணுக்களின் முளையையும் வேறுபடுகின்றன.

இரண்டாவதாக பல ஆற்றலுடைய மூல உயிரணுக்கள். இவை ஓர் உறுப்பு அல்லது ஒரு திசுவை விட மேலாதிகமானவற்றில் செல்வாக்கு ஏற்படுத்தும் ஆற்றலுடையதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. ஒரு மூல உயிரணுவின் உட்பகுதி, இடைப்பகுதி, வெளிப்பகுதி சவ்வுகளில், உள்ள மூல உயிரணுக்கள் வேறுபடுகின்றன. இவை முளைக்கின்ற மற்றும் வளர்ந்த மூல உயிரணுக்களை உருவாக்கக்கூடியவை. மூன்றாவதாக பன்முக ஆற்றலுடைய மூல உயிரணுக்கள். இவை தங்களின் மூல உயிரணு குடும்பத்தோடு நெருக்கிய தொடர்புடைய உயிரணுக்களை மட்டுமே உற்பத்தி செய்யக்கூடியவை. எடுத்துக்காட்டாக, ஓர் இரத்த மூல உயிரணு பல்வேறு வகையான இரத்த உயிரணுக்களை உருவாக்குகின்றன. நான்காவதாக ஓர் ஆற்றலுடைய உயிரணுக்கள். இவை ஒரே வகை உயிரணுக்களை மட்டுமே உற்பத்தி செய்யக்கூடியவை. இதற்கு தோல் உயிரணுக்களை கூறலாம். இவையும் புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டவை. பன்றிகளிலிருந்து மூல உயிரணு பற்றி நாம் கேட்கயிருக்கின்ற இந்த ஆய்வில் இரண்டாவதாக கூறப்பட்ட பல ஆற்றலுடைய மூல உயிரணுக்களை உருவாக்குவதில் வெற்றியடைந்துள்ளது தான் விவரிக்கப்படுகிறது.

மூல உயிரணுக்களை பற்றிய ஆராய்ச்சி அண்மையில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மூல உயிரணுக்களை பயன்படுத்தி பல்வேறு நோய்களை குணப்படுத்திவிட முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் பன்றிகளின் உயிரணுக்களை மூல உயிரணு முளைகளாக உருவாக்க முடியும் என்றும் அதன் மூலம் மனித உடலிலுள்ள எந்த வகையான உயிரணுக்களை வேண்டுமானாலும் வளர்த்தெடுக்கலாம் என்றும் சீன அறிவியலாளர்கள் ஜூன் மூன்றாம் நாள் அறிவித்துள்ளனர். ஷாங்ஹாய் உயிர் வேதியல் மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் சீன அறிவியல் கழகம், பல ஆற்றலுடைய மூல உயிரணுக்களை உருவாக்குவதில் வெற்றிபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு காலில் குளம்புள்ள விலங்கிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலில் குளம்புள்ள விலங்குகளின், உயிரணு உற்பத்தி செய்யாத பிற உயிரணுக்களை பயன்படுத்தி இந்த பல ஆற்றலுடைய மூல உயிரணுக்களை பெற முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.