• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-20 14:43:58    
கோழி இறைச்சி இடம்பெறும் ஒரு உணவு வகை

cri
வாணி – இன்று வாணி, க்ளீட்டஸ் இருவரும் தொடர்ந்து சுவையான சீன உணவு வகைகள் பற்றி தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
க்ளீட்டஸ் – வாணி, இன்று எந்த வகை சீன உணவு பற்றி கூறுகின்றோம்?
வாணி – நம்மில் பெரும்பாலோர் கோழி இறைச்சியைச் சாப்பிட விரும்புகின்றனர். ஆகையால், இது பற்றிய சீன உணவு வகைகளைக் கூடுதலாக அறிமுகப்படுத்துமாறு சில நேயர்கள் கடிதம் மூலம் தெரிவித்தனர்.

க்ளீட்டஸ் – ஓ. நல்லது அப்படியெனில், இன்று நாம் கோழி இறைச்சி இடம்பெறும் ஒரு உணவு வகை பற்றி கூறுகின்றோம். அல்லவா?
வாணி – ஆமாம், இன்றைய உணவு வகையின் சீனப் பெயர் gong bao ji ding. சீனாவுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு நண்பர்கள் உணவகத்தில் இதைச் சாப்பிடுவது அதிகம். இது சீன சிச்சவான் மாநில உணவு வகைகளில் ஒன்றாகும்.
க்ளீட்டஸ் – தயாரிப்பதற்கு அதிகப் பொருட்கள் தேவையில்லை.
வாணி – ஆமாம், தேவையான பொருட்களை கூறுகின்றேன்.

கோழி கால் 3
காய்ந்த மிளகாய் 5
மிளகு சிறிதளவு
வெங்காயத் தழை, இஞ்சி, போதிய அளவு
பூண்டுப்பல் 5
சமையல் மது 10 மில்லி லிட்டர்
சோயா சாஸ் 5 மில்லி லிட்டர்
காடி 5 மில்லி லிட்டர்
உப்பு, சர்க்கரை போதிய அளவு
ஒரு முட்டையின் வெள்ளை பகுதி 

வாணி – முதலில், கோழி காலின் எலும்பு, தோல் ஆகியவற்றை நீக்க வேண்டும். பிறகு, அவற்றை ஒரு சென்டிமீட்டர் அளவுடைய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
க்ளீட்டஸ் – வெட்டிய கோழிக்காலின் துண்டுகள் உள்ள பாத்திரத்தில், உப்பு, சமையல் மது, நல்லெண்ணெய், சோயா சாஸ், முட்டையின் வெள்ளைப் பகுதி ஆகியவற்றை கொட்டவும். பிறகு, கைகளால், நன்றாக கிளற வேண்டும். அதன் பின் 10 நிமிடங்கள் அப்படியே இருக்கவிட வேண்டும்.
வாணி – வெங்காயத்தழை, இஞ்சி, பூண்டுப்பல் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக்கொண்டு, இதில் சோயா சாஸ், காடி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சேர்க்கவும்.
க்ளீட்டஸ் – காய்ந்த மிளகாயை என்ன செய்ய வேண்டும்?
வாணி – கத்தியால் காய்ந்த மிளகாயை சிறிய அளவாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
க்ளீட்டஸ் – தற்போது, கோழி இறைச்சி தயார்.

வாணி – சரி, வாணலியை அடுப்பின் மீது வைத்து, இதில் சிறிதளவு உணவு எண்ணெயை ஊற்றலாம். அதிக நேரம் காத்திருக்க வேண்டாம். கோழி இறைச்சித் துண்டுகளை இதில் கொட்டி, வதக்கவும். பொன் நிறமாகிய பின், அவற்றை வெளியே எடுத்து, ஒரு தட்டி வைக்கலாம்.
க்ளீட்டஸ் – வாணலியை மீண்டும் அடுப்பின் மீது வைத்து, இதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி, மிதமான சூட்டில் முதலில் காய்ந்த மிளகாயை வதக்கவும். பிறகு, கோழி இறைச்சித் துண்டுகளையும் வெங்காயத்தழை கலவையையும் இதில் கொட்டலாம். எல்லாவற்றையும் சுமார் ஒன்றரை நிமிடம் வதக்கவும்.
வாணி – இன்றைய gong bao ji ding தயார்.

க்ளீட்டஸ் – வாணி, இன்றைய உணவு வகையில் கோழி இறைச்சி மட்டும் இடம்பெறுகிறது. இதில், ஏதேனும் காய்கறிகளைச் சேர்க்க முடியுமா?
வாணி – உங்கள் யோசனை வரவேற்கத்தக்கது. உணவு வகைகளில் இறைச்சி மட்டுமல்ல, அதிக காய்கறிகளைச் சேர்க்க வேண்டும். இன்றைய உணவு தயாரிப்பதில், வெள்ளரிக்காய், கேரட் ஆகிய இரண்டு வகைகளையும் பயன்படுத்தலாம். மறவாமல், அவற்றையும் ஒரு சென்டி மீட்டர் அளவுடைய சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
க்ளீட்டஸ் – சரி, நேயர்களே நீங்கள் வீட்டில் தயாரித்து ருசிப்பாருங்கள்.
வாணி – இத்துடன் இன்றைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நிறைவடைகி்ன்றது. மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம். வணக்கம்.