• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-21 15:09:04    
உலக அரசியல் துறையில் சீனாவின் முக்கிய பங்கு

cri

சொந்த வளர்ச்சி, வெளிநாடுகளுக்கான மதிப்பு, இணக்கமான உலகைக் கட்டியமைப்பதிலான பங்கு ஆகிய கருத்துகளுக்காக, சீனா சர்வதேசச் சமூகத்தின் பரந்த பாராட்டைப் பெற்றுள்ளது.
நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கு முன், 64வது ஐ.நா பொதுப் பேரவையின் பொது விவாதக் கூட்டம், செப்டம்பர் 23 முதல் 29ம் நாள் வரை, நியூயார்கிலுள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. உலக அறைகூவல்களை பயனுள்ள முறையில் சமாளித்து, பல தரப்புவாதத்தையும் வேறுபட்ட நாகரிகங்களுக்கிடை பேச்சுவார்த்தையையும் வலுப்படுத்தி, சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவது, இவ்விவாதக் கூட்டத்தின் நோக்கமாகும். சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் இதில் உரை நிகழ்த்தி, இணக்கமான உலகத்தைக் கட்டியமைப்பது பற்றிய கருத்தை மீண்டும் விளக்கிக் கூறினார். தற்போதைய உலக நிலைமையை எதிர்கொள்ள, சர்வதேசச் சமூகம், ஒன்றிணைந்து, கூட்டாக வளர்ச்சியடைந்து, அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி, பொறுமை ஆகிய கருத்துக்களின் அடிப்படையில், நீண்டகால அமைதி மற்றும் கூட்டுச் செழுமையான இணக்க உலகத்தைக் கட்டியமைப்பதை முன்னேற்ற வேண்டும் என்று ஹூசிந்தாவ் சுட்டிக்காட்டினார். இது பற்றி, அவர் கூறியதாவது,
மேலும் பரந்த பார்வையுடன் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உலக அமைதி மற்றும் நிதானத்தை பேணிக்காக்க வேண்டும். மேலும் பன்முகக் கருத்துடன் வளர்ச்சியை அணுகி, கூட்டுச் செழுமையை முன்னேற்ற வேண்டும். மேலும் திறந்த மனப்பான்மையுடன் ஒத்துழைப்பை மேற்கொண்டு, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவதைத் தூண்ட வேண்டும். ஒன்றுக்கு ஒன்று பொறுமை காத்து, இணக்க வாழ்வை நிறைவேற்ற வேண்டும் என்று ஹூசிந்தாவ் கூறினார்.


ஹூசிந்தாவின் உரை, பல நாடுகளால் பாராட்டப்பட்டது. உண்மையில், நவ சீனா நிறுவப்பட்டது முதல், இது வரை, சீனா, சர்வதேசத்தில் பல முறை இத்தகைய தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. 1954ம் ஆண்டு, அப்போதைய சீனத் தலைமையமைச்சர் Zhou Enlai, பாண்டுங் மாநாட்டில் கலந்து கொண்ட போது, அமைதிச் சக வாழ்வு பற்றிய 5 கோட்பாடுகளை முதல் முறையாக முன்வைத்தார். இக்கோட்பாடுகள், வளரும் நாடுகளால் ஒருமனதாக ஆதரிக்கப்பட்டன. இவை, நியாயமான சர்வதேச ஒழுங்கிற்கு பங்காற்றின. 1971ம் ஆண்டு, பரந்துபட்ட வளரும் நாடுகளின் கூட்டு முயற்சியின் மூலம், நவ சீனா ஐ.நாவுக்கு மீண்டும் வெற்றிகரமாகத் திரும்பியது. அமைதியும் வளர்ச்சியும், இக்காலக் கட்டத்தின் இரண்டு முக்கிய அம்சங்கள் என்ற மாபெரும் கருத்தை, 1985ம் ஆண்டு, சர்வதேச நிலைமையிலான புதிய மாற்றத்தை எதிர்நோக்கி, அப்போதைய சீன தலைவர் தென்ஷியாவ்பிங் முன்வைத்தார். அமைதி மற்றும் வளர்ச்சியை நிறைவேற்றுவது, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களது கூட்டு விருப்பமாகும். இது காலத்தின் அவசியத் தேவையும் ஆகும் என்று முன்னாள் சீன அரசுத் தலைவர் ஜியாங்செமின் கூறினார். 2000ம் ஆண்டு, அவர் ஐ.நாவின் புத்தாயிரமாண்டு உச்சி மாநாட்டில் மீண்டும் சுட்டிக்காட்டினார். 2005ம் ஆண்டு செப்டம்பர் திங்கள், ஐ.நா நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவின் உச்சி மாநாட்டில் நீண்டகால அமைதியும், கூட்டுச் செழுமையும் கொண்ட இணக்கமான உலகை எப்படி கட்டியமைப்பது எனும் முக்கிய உரையை, சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் நிகழ்த்தினார். அதற்குப் பின், இணக்கமான உலகை உருவாக்குவது என்ற கருத்து, வெளிநாடுகளுடனான சீனாவின் அணுகுமுறையின் அடிப்படையாக மாறியது.
ரஷிய-சீன நட்புறவுச் சங்கத்தின் தலைவரும், ரஷிய அறிவியல் கழகத்தின் தொலைக் கிழக்கு ஆய்வகத்தின் தலைவருமான Mikhail Titarenko கூறியதாவது,
நவ சீனா நிறுவப்பட்ட பின், சீனா, அண்டை நாடுகளுடன் நீண்டகால சுமூகமான நட்புறவைக் கட்டியமைக்கப் பாடுபட்டு வருகிறது. உலக நிதானம் மற்றும் அமைதியை பேணிக்காக்க முக்கிய பங்காற்றி வருகிறது என்று அவர் கூறினார்.


வளரும் நாடாக, கடந்த சில ஆண்டுகளாக, சீனா, மற்ற வளரும் நாடுகளுடன் எப்போது கூட்டாக வளர்ச்சியடைந்து, கூட்டாக அறைகூவல்களை எதிர்நோக்கி வருகிறது. அத்துடன், பிற நாடுகளுக்கு இயன்ற உதவிகளையும் வழங்கி வருகிறது. ஐ.நாவின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒரே வளரும் நாடாக, சீனாவின் பங்கு பதிலாக மாற்றப்பட முடியாத பங்காகும் என்று சீனாவுக்கான நைஜீரியத் தூதர் J.O.Coker கூறினார்.
சீனா, வளரும் நாடாகவும், அணி சேரா இயக்கத்தின் உறுப்பு நாடாகவும், தெற்கு தெற்கு ஒத்துழைப்பின் முக்கிய பகுதியாகவும், மூன்றாவது உலக நாடாகவும் இருக்கிறது. ஐ.நா பாதுகாப்பவையில் சீனாவின் நிலைப்பாடு, வளரும் நாடுகளின் தேவைகள் மற்றும் கருத்துக்களை தெளிவாகப் பிரதிநிதிப்படுத்துகிறது என்று தூதர் Coker கூறினார்.
60 ஆண்டுகளாக, நவ சீனா, அண்டை நாடுகளுடன் சுமூகமான நட்புறவு என்ற கொள்கையை எப்போதும் கடைபிடித்து வருகிறது. இது, பிரதேச நிதானம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றியது.
சர்வதேச நிலைமையின் மாற்றத்துடன், அமைதிச் சக வாழ்வு பற்றிய 5 கோட்பாடுகளின் அடிப்படையில், சீனா, மென்மேலும் அதிகான நாடுகளுடன் தூதாண்மையுறவை நிறுவி வருகிறது. உலகில் மிகப் பெரிய வளரும் நாடான சீனாவும், மிகப் பெரிய வளர்ந்த நாடான அமெரிக்காவும், 1979ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தூதாண்மையுறவை நிறுவின. சீன-அமெரிக்க தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 30 ஆண்டுகளில், இன்னல்களை எதிர்நோக்கிய போதிலும், இதில் பல முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன.
தவிர, சீனா முன்முயற்சியுடன் மென்மேலும் அதிகமான பொறுப்பு ஏற்று வருகிறது. நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், 100 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் நிறுவனங்களுக்கு உதவி வழங்கியுள்ளது. நிறைவேற்றப்பட்ட பல்வேறு உதவி திட்டப்பணிகளின் எண்ணிக்கை சுமார் 2000 ஆகும். தவிர, சீனா, சர்வதேச விவகாரங்களிலும் ஆக்கப்பூர்வமாகக் கலந்து கொண்டு வருகிறது.