இந்திய The Hindu ஏட்டின் கருத்து
cri
இந்திய The Hindu ஏட்டின் தலைமை பதிப்பாசிரியர் N. ராம் 22ம் நாள் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற 2வது சீனத் திபெத்தின் வளர்ச்சி கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார். திபெத்தின் சமூகம், பொருளாதாரம், கல்வி, தொழில் துறை முதலிய துறைகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. திபெத் பிரச்சினை பற்றி சில மேலை நாடுகளின் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட கட்டுரைகள் உண்மைக்கு புறம்பானவை நியாயமற்றவை என்று அவர் கூறினார். மனித உரிமைப் பிரச்சினை பற்றி குறிப்பிடும் போது, மக்களின் வாழ்க்கைத் தரம், சமூக நிதானம், கல்வி தரம், அரசியல் பங்கெடுப்பு முதலியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மேற்கூறிய மேலை நாடுகளின் செய்தி ஊடகங்களின் தவறான பார்வையில் திபெத்தின் வளர்ச்சியை மதிப்பிடக் கூடாது என்று திரு N. ராம் கூறினார்.
|
|