• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-04 09:45:54    
பாராட்டு, புகழுரை, நற்பெயர்

cri

பாராட்டு, புகழுரை, நற்பெயர் இவற்றோடு தொடர்புடைய இரு கதைகள் கடந்த வாரம் நிகழ்ச்சியில் இடம்பெற்றன. ஆதாயத்திற்காக அடிவருடிகளாக இருக்கும் காக்கைக் கூட்டங்களும், சகட்டு மேனிக்கு மற்றவரை புகழ்ந்து தள்ளி நல்லவன் என்று பெயர் வாங்கிக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறும் தன்னலவாதிகளும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் இப்படி பொய்யுரையை, தேவையற்ற புகழுரையை பயன்படுத்தியும் கூட சில நன்மைகளைச் செய்யும் திறமைசாலிகளும் இல்லாமல் இல்லை. அந்த வகையைச் சேர்ந்த ஒருத்தனை பற்றியதுதான் இன்றைய கதை.
சரி, கதைக்கு வருவோம், ஆக ராணிகள் இருவரும் பொற்காசுகளை தனக்கு வலிய வந்து தந்ததற்குரிய காரணத்தை உணர்ந்துகொண்ட ஷாங் யி, அரசனை சென்று சந்தித்து விடை பெற எண்ணினான். "அரசே, நான் மீண்டும் இங்கு திரும்பி வருவதற்கு கொஞ்சம் நீண்டகாலம் ஆகக்கூடும். எனவே அரசரோடு சேர்ந்து மகிழ்ச்சியாக மதுவருந்த விரும்புகிறேன்" என்றான். அரசனும், ச்சின் நாட்டு அழகான பெண்களை கொண்டு வரப்போகிறானே இந்த தூதன் என்ற காரணத்தாலோ என்னவோ, அவன் மதுவருந்த கேட்டவுடனே, அரசன் பணியாட்களை வரவழைத்து மதுவை கொண்டுவரும்படி கட்டளையிட்டான். பின் விருந்தில் மதுவின் சுவையும் கூட, மகிழ்ச்சியும் சேர, ஷாங் யி, அரசே, இங்கேதான் வெளியாட்கள் யாருமில்லையே, உங்கள் ராணிகளை நம்மோடு விருந்துண்ண அழைக்கலாமே" என்று கோரினான்.

அரசனும், சரி உன் விருப்பப்படியே நடக்கட்டும் என்று ராணியரை வரவழைத்தான்.
ராணிகள் இருவரும் வந்து மதுவை பரிமாறத்தொடங்கினர். சட்டென் எழுந்தி நின்ற ஷாங் யி, தலையை தாழ்த்தி, முழங்காலில் நின்று, "அரசே என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும். நான் உங்களிடம் பொய் சொல்லிவிட்டேன், நீங்கள் என்னை தண்டித்தாகவேண்டும்" என்றானாம்.
அரசனுக்கு ஒன்றும் விளங்காமல், " என்ன பிரச்சனை, என்ன பொய் சொன்னாய் நீ" என்று கேட்க, " அரசே, நான் பல இடங்களுக்குச் சென்றுள்ளேன். ஆனால் உங்கள் இரு ராணிகளைப் போல வேறு எந்த இடத்திலும் நான் இவ்வளவு அழகான பெண்களை பார்த்ததில்லை. உங்களிடம் நான் உலகிலேயே அழகான பெண்கள் ச்சின் நாட்டிலுள்ளவர்கள் என்றும், அங்கிருந்து தங்களுக்கு அழகிய பெண்களை கொண்டு வருவதாகவும் கூறினேன். அப்போது நான் என்ன சொல்கிறேன் என்று புரியாமல் பேசியிருக்கிறேன் என்பது இப்போது உங்கள் ராணிகளை பார்த்தபின் புரிகிறது, என்னை மன்னியுங்கள்" என்றானாம் ஷாங் யி.


உடனே அரசன், மகிழ்ச்சி பொங்க சிரித்துவிட்டு, "சரி விடு தூதனே, இந்த இரு ராணிகளும்தான் உலகில் தலைசிறந்த அழகிகள் என்பது என்னுடைய நீண்டகால் கருத்து, என் நம்பிக்கை" என்றானாம். மட்டுமல்ல, அழகிகளை கொண்டு வருமாறு கோரி அவனுக்கு அளித்த பொன்னும் பொருளையும் கூட அரசன் அவனிடமே விட்டுவிட்டானாம். கையில் காசில்லாமல் நின்ற தூதன் ஷாங் யி, தன் மதிநுட்பத்தால் மடி நிறைய பொன்னோடு நாடு திரும்பினான். தேவையற்ற பாராட்டும், புகழுரையும் சில வேளைகளில் நன்மையில் முடியக்கூடும். அழகிய பெண்கள் என்பதை கொண்டு தூதன் ஷாங் யி, அரசனை ஏமாற்றியதாக தெரிந்தாலும், உண்மையில் அழகிகள் யாரையும் கொண்டு வந்து குழப்பாமல், அரசனின் ராணிகளின் வாழ்க்கையை குலைக்காமல், வெறும் புகழுரையைக் கொண்டே, அரசனை அவனது ராணிகளே அழகிகள் என்று ஒப்புக்கொள்ளச் செய்தது மட்டில், நாம் ஷாங் யியை பாராட்டத்தான் வேண்டும்.
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும் பொய்யாமொழிப் புலவர் அய்யன் திருவள்ளுவரே கூட "பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்" என்று கூறியிருக்கிறார் அல்லவா?