• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-05 15:20:44    
எரியாற்றல் செலவை குறைப்பதற்கு முயற்சி

cri

முத்து......எரியாற்றல் செலவை குறைப்பதற்கு எதாவது முயற்சி உண்டா?

கலை.....கண்டிப்பாக. பதிலளிப்பதற்கு முன் தலைவர் ச்சான் கோ போ தெரிவித்த கருத்தை கேளுங்கள்.

இந்த முயற்சியில் முதலில் தூய்மையான வழி முறையில் நிலக்கரியை பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை பெரிதும் பரப்புரை செய்வோம். அதேவேளையில் வளர்ச்சிக்கு பொருந்தாத பழைய இயந்திரங்களை பெரிதும் நீக்குவோம் என்று அவர் கூறினார்.

முத்து......இந்த முயற்சியில் சீனா வேறு எதாவது நடவடிக்கைகளையும் மேற்கொண்டதா?

கலை.....ஆமாம். பாரம்பரிய எரியாற்றல் செலவை படிப்படியாக குறைக்கும் அதேவேளையில் சீனா புதுப்பிக்க வல்ல எரியாற்றல் மற்றும் புதிய எரியாற்றல் அகழ்வை விரைவுப்படுத்தியுள்ளது.

முத்து......சட்டரீதியில் இதற்கு எத்தகைய ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது?

கலை..... சொல்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன் புத்தாக்க எரியாற்றல் சட்டத்தை சீனா வெளியிட்டது. சூரிய ஆற்றல் காற்று ஆற்றல் போன்ற புதிய வகை எரியாற்றல்கள் எரியாற்றல் வளர்ச்சியில் முன்னுரிமை உடைய துறைகளாக இதில் கருதப்பட்டுள்ளது.

முத்து......கோட்பாட்டு ரீதியில் முன்னுரிமை வழங்கப்பட்டது. அப்படியிருந்தால் அதற்கு எதாவது நிதி ஆதரவு உண்டா?

கலை.....உண்டு. இவை தொடர்பான அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சிக்கும் துறைமயமாக்க வளர்ச்சிக்கும் நிதி ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

முத்து......இந்த ஆதரவுக் கொள்கைகளின் முன்னேற்றத்துடன் சீனாவில் புதிய எரியாற்றல் துறையின் வளர்ச்சியில் எத்தகைய மாதிரி முன்னேற்றம் காணப்பட்டது?

கலை.....இது பற்றி நமது தலைவர் ச்சான் கோ போ விளக்கிய சாதனைக விபரங்களைக் கேளுங்கள்.

கடந்த 60 ஆண்டுகளில் நீர் மின்னாற்றல் உற்பத்தி, அணு மின்னாற்றல், காற்று மின்னாற்றல், இயற்கை எரிவாயு உள்ளிட்ட உயர் தரம் கொண்ட எரியாற்றல் பயன்பாட்டு விகிதம் 11.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. நாட்டில் நீர் மின்னாற்றல் உற்பத்தித் திறன் 17 கோடியே 20 இலட்சம் கிலோவாட்டை அடைந்துள்ளது. இது உலகில் முதலிடம் வகிக்கிறது. காற்று மின்னாற்றல் உற்பத்தியளவு மூன்று ஆண்டுகளாக மடங்காக அதிகரித்துள்ளது. சூரிய ஆற்றல் பயன்படுத்தும் கருவிகளின் பரப்பளவு 12 கோடியே 50 இலட்சம் சதுர மீட்டரை எட்டியது. இது உலகில் முதல் இடம் வகித்தது என்று அவர் கூறினார்.

முத்து......திரு ச்சான் கோ போ குறிப்பிட்டதை கேட்கும் போது எரியாற்றல் அளவை சிக்கனப்படுத்துவதில் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்ற உணர்ச்சி எனக்குள் எழுகிறது.

கலை.....மிக்க மகிழ்ச்சி. தற்போது சீன அரசு தொடர்ந்து புதிய எரியாற்றல் அகழ்வுத் திட்டத்தை வகுத்து காற்று மற்றும் சூரிய மின்னாற்றல் பொருளியல் உள்ளிட்ட புதிய எரியாற்றலுக்காக 3 இலட்சம் கோடி யுவானை ஒடுக்கும். தவிர, சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் சீனா பொறுப்பேற்கும் நாடாக புத்தாக்க எரியாற்றல் மற்றும் அணு ஆற்றல் விகிதத்தை அதிகரிக்க வாக்குறுதியளிக்கும் என்று தெரிவித்தார்.

முத்து......சீன அரசுத் தலைவரின் வாக்குறுதி நடைமுறைப்படுத்தும் என்பதில் எனக்கு ஐயமேயில்லை. ஆசியா மற்றும் உலகில் முக்கிய எரியாற்றல் உற்பத்தி மற்றும் நுகர்வு நாடாகிய சீனா சர்வதேச ரீதியில் இது தொடர்பாக எதாவது முயற்சி மேற்கொண்டுள்ளதா?

கலை..... ஆமாம். அளவீடு மற்றும் அகழ்வு, எண்ணெய் சுத்திகரிப்பு, எண்ணெய் குழாய் போடுவது முதலிய துறைகளில் இதுவரை சீனா உலகின் 40க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டுள்ளது.

முத்து......இந்த முயற்சியில் விளைவாக மேற்கொள்ளப்படும் திட்டங்களை நான் குறிப்பிடலாமா?

கலை..... நிச்சயமாக.

முத்து......சீனா கசாகஸ்தான் இரு நாடுகளுக்குமிடையில் கச்சா எண்ணெய் வினியோகக் குழாய் திட்டம் நிறைவேற்றப்பட்டது. சீன-ரஷிய எண்ணெய் நினியோகக் குழாய் கட்டியமைக்கும் கட்டத்தில் உள்ளது. இவ்வாண்டின் இறுதியில் மத்திய ஆசிய நாடுகளுக்கான இயற்கை எரிவாயு நினியோகக் குழாய் திட்டம், மேற்கிலிருந்து இயற்கை எரிவாயை கிழக்கிற்கு அனுப்பும் திட்டப்பணியின் இரண்டாவது நெறியின் மேற்குப் பகுதி திட்டம் செயல்பாட்டில் இறங்கும். அப்போது மத்திய ஆசிய இயற்கை எரிவாயு பெய்ஜிங்கிற்கு அனுப்பபடும் என்று அறிந்தேன்.

கலை.....நீங்கள் குறிப்பிட்டது சரிதான்.

முத்து......எரியாற்றல் துறையிலான சர்வதேச ஒத்துழைப்பை சீனா அதிகரித்துள்ள வேளையில் அதற்கான முதலீட்டை அதிகரிக்கவும் திட்டமிடுகின்றதா?

கலை.....ஆமாம். உலகின் சில இடங்களில் எரியாற்றல் மற்றும் சுரங்க தாது மூல வளத்துக்கான முதலீட்டை சீனா அதிகரித்துள்ளது.

முத்து......முதலீடு செய்யப்படும் இடங்கள் இது பற்றி தெரிவிக்கும் கருத்து என்ன?

கலை..... எரியாற்றல் மற்றும் தாது மூலவள அகழ்வில் சீனா செய்த முதலீட்டுக்கு அவை வரவேற்பையும் ஆதரவையும் தெரிவித்துள்ளன.

முத்து......இவற்றில் மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் உண்டா?

கலை.....இது பற்றி சீன தேசிய எரியாற்றல் ஆணையத்தின் தலைவர் ச்சா கோ போ சொன்னதை கேளுங்கள்.

வெளிநாடுகளிலான சீன முதலீடு உலகின் எரியாற்றல் உற்பத்திக் திறனை அதிகரிக்க உதவும். இது ஆக்கப்பூர்வமான காரணியாகும். முதலீடு செய்யப்படும் இடங்களில் பெரும்பாலானவை சீனாவுக்கு வரவேற்பும் ஆதரவும் அளிக்கும் மனப்பான்மையுடன் இருக்கின்றன. இப்போது மேலும் கூடுதலான மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் சீனாவுடன் மூன்றாவது நாட்டில் கூட்டாக முதலீடு செய்வது பற்றி ஆராய ஆர்வம் தெரிவித்துள்ளன என்று அவர் கூறினார்.

முத்து......இன்று நாம் குறுகிய நேரத்தில் எரியாற்றலின் பங்கு பெறும் அம்சங்கள் பற்றி விவாதித்தோம். எரியாற்றல் செலவு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். சீன அரசு இதை உணர்ந்ததோடு உரிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

கலை.....ஆமாம். இன்றய உரையாடலை நேயர் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திய பின் சாதாரண மக்களிடையில் எரியாற்றல் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு எழ வேண்டும். அனைவரும் முயற்சித்து நாட்டுக்காகவும் உலக மக்களுக்காகவும் மூல வளத்தை சிக்கனப்படுத்தும் உணர்வில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

முத்து......மேலும் மனிதரின் இணக்கத்திற்கு நன்மை பயக்க வேண்டும் என்ற அருமையான இலக்கு நனவாக்கப்படுவதற்கு எதாவது உதவி வழங்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.