சீனத் தலைமையமைச்சர் வென் சியா பாவ் 6ம் நாள் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு, எகிப்து சென்றார். அடுத்த 3 நாட்கள், எகிப்தில் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் Sharm el Sheikh நகரில் நடைபெறும் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 4வது அமைச்சர் நிலை கூட்டத் துவக்க விழாவில் அவர் கலந்துகொள்வார்.
எகிப்து தலைமையமைச்சர் Ahmed Mahmoud Mohamed Nazefபின் அழைப்பிற்கிணங்க, எகிப்து சென்றுள்ள வென் சியா பாவ், அரசுத் தலைவர் Muhammed Hosni Mubarakஐயும், தலைமையமைச்சரையும் சந்தித்துரையாடுவார். மேலும் சீனாவும் எகிப்தும் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் தொடர்புடைய ஆவணங்களில் அவர் கையொப்பமிடுவார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
ஆப்பிரிக்காவுடன் ஒத்துழைக்கும் பல புதிய நடவடிக்கைகளை சீனா மேலும் வலுப்படுத்தும் என்று வென் சியா பாவ் தெரிவித்தார்.
சீனாவுக்கும் அரபு நாடுகளுக்கிடையில் ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னேற்றும் வகையில், அரபு லீக்கின் தலைமையகத்திலும் அவர் பயணம் மேற்கொள்வார்.
|