• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-06 15:27:56    
11வது சீன தேசிய விளையாட்டுப் போட்டி

cri
அக்டோபர் 16 முதல், 28ம் நாள் வரை, சீன மக்கள் குடியரசின் 11வது தேசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் சான் தூங் மாநிலத்தின் சிய் நான் நகரில் நடைபெற்றது. இந்த தேசிய விளையாட்டுப் போட்டியில், 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெளிப்பட்ட சிறந்த வளர்ச்சியை சீன வீரர்கள் நிலைநிறுத்தி, பல்வேறு போட்டிகளிலும், உலக மற்றும் ஆசிய சாதனைகளை பதிவாக்கி, சீனர்கள் விளையாட்டுகளில் கூட்டும் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளனர்.

புள்ளிவிபரங்களின் படி, நீச்சல் போட்டிகளில், 7 வீரர்களின் சாதனைகள் இவ்வாண்டு உலகின் முதல் 5 இடங்களை பெறுகின்றன. 4 வீரர்களின் சாதனைகள் உலகில் முதல் 3 இடங்களை பெறுகின்றன. அத்துடன், 11 நீச்சல் போட்டிகளின் ஆசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டன. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், சீன நீச்சல் வீரர்கள் சிறந்த போட்டியாற்றலை நிலைநிறுத்தியுள்ளனர் என்று சீன தேசிய விளையாட்டு ஆணையத்தின் நீச்சல் விளையாட்டு நிர்வாக மையத்தின் பொறுப்பாளர் Yuan Haoran கருத்துத் தெரிவித்தார்.

பொதுவாக கூறினால், இந்த தேசிய விளையாட்டுப் போட்டியின் நீச்சல் போட்டி சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ளது. பல போட்டிகளின் சாதனைகள் மிக சிறந்த அதிகரிப்பில் பதிவாகியுள்ளன. 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 200 மீட்டர் மகளிர் பூச்சிப் பாணி நீச்சல் போட்டியின் தங்கப் பதக்கத்தைப் பெற்றது முதல், இவ்வாண்டு ரோமில் நடைபெற்ற உலக நீச்சல் போட்டி வரை, சீன தேசிய நீச்சல் அணி சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ளது. 2012ம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலும் இக்குழு மேலும் நல்ல சாதனைகளைப் பெற எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

பளுதூக்குதல் போட்டியில், சீன வீரர்கள் உலக சாதனைகளை பல முறை பதிவாக்கியுள்ளனர். குறிப்பாக, புதிய விளையாட்டு வீரர்கள் சிறந்த போட்டியாற்றலை வெளிக்கொணர்ந்துள்ளனர். ஏற்கனவேயுள்ள பளுதூக்குதல் போட்டிகளில், சீனா பெற்றுள்ள மேம்பாடு பல தலைசிறந்த விளையாட்டு வீரர்களை தோன்ற செய்துள்ளன. சில எடைகள் குறைவாக தூக்குகின்ற இளம் வீரர்களும் தோன்றியுள்ளனர். 2012ம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆயத்த பணிக்கு உறுதியான அடிப்படையை இது உருவாக்கியுள்ளது என்று சீன தேசிய விளையாட்டு ஆணையத்தின் பளுதூக்குதல், மற்போர் மற்றும் யுடோ நிர்வாக மையத்தின் தலைவர் Ma Wenguang தெரிவித்தார். அவர் கூறியதாவது: