• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-08 20:16:11    
சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றம்

cri
சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 4வது அமைச்சர் நிலைக் கூட்டம், 8ம் நாள் எகிப்தின் Sharm El Sheikh நகரில் நடைபெற்றது.

சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவும், எகிப்து அரசுத் தலைவர் Hosni Mubarak உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளின் அரசுத் தலைவர்களும், ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்தின் தலைவர் Jean Pingஉம், இக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். 49 ஆப்பிரிக்க நாடுகள், சீனா ஆகியவற்றைச் சேர்ந்த, தூதாண்மை, வர்த்தகம், தொழிற்துறை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்குப் பொறுப்பான சுமார் 100 அமைச்சர் நிலை அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். வென்சியாபாவ், துவக்க விழாவில் நிகழ்த்திய உரையில், ஆப்பிரிக்காவுடனான ஒத்துழைப்பு பற்றிய புதிய 8 நடவடிக்கைகளை அறிவித்தார்.

இம்மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாட்டிற்குப் பின்பான நடவடிக்கைகளின் நடைமுறை நிலைமை பற்றிய அறிக்கையை, இக்கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சர் யாங்சியேச்சு வழங்கினார். சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் Sharm El Sheikh அறிக்கை, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் Sharm El Sheikh நடவடிக்கைத் திட்டம் ஆகிய ஆவணங்கள், இக்கூட்டத்தில் பரிசீலனை செய்து ஏற்றுக் கொள்ளப்பட்டன.