• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-08 18:56:08    
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலான நிலநடுக்கம்

cri

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷிகாசெவில் 8ம் நாள் விடியற்காலை, நிலநடுக்கம் ஏற்பட்ட பின், இப்பிரதேசத்தின் நிலநடுக்கப் பணியகமும் ஷிகாசெவின் Ngamring மாவட்ட அரசும், பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்குப் பணிக்குழுக்களை அனுப்பியுள்ளன. தற்போது, உயிர் மற்றும் உடைமை இழப்பு பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. Ngamring மாவட்டத்திலுள்ள Qie Re கிராமத்தில் நில அதிர்வு மிகவும் தெளிவாக உணரப்பட்டது. உள்ளூர் வீடுகளில், விரிசல்கள் ஏற்பட்டன. விரிவான நிலைமைக்கான கள ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகினறது என்று தெரிகிறது.

சீன நிலநடுக்க கண்காணிப்பு வலைப்பின்னலின் தகவலுக்கிணங்க, நவம்பர் 8ம் நாள் விடியற்காலை 4:08 மணிக்கு, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷிகாசெவிலுள்ள Ngamring மற்றும் Saga மாவட்டங்களிடை எல்லையில், ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆகப்பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் புவிக்கடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தே ஏற்பட்டதாக தெரிகிறது.