• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-09 15:14:36    
11வது சீன தேசிய விளையாட்டுப் போட்டி 2

cri

இந்த போட்டியில் கிடைத்த வேற்றியில் நான் மனநிறைவு அடைகின்றேன். பல்வேறு போட்டிகளில் வெற்றிகள் கிட்டின. சீனாவில், அதிக திறமைசாலிகள் உள்ளனர் என்று அவர் கூறினார்.
இந்த தேசிய விளையாட்டுப் போட்டியின் தடகள போட்டிகளில், ஓராண்டு சிகிச்சைக்கு பின்னர், 2004ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 110 மீட்டர் ஆடவர் தடைதாண்டும் ஓட்டப்போட்டியின் தங்கப் பதக்கத்தைப் பெற்றவரும், உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றவருமான Liu Xiang, போட்டிக்கு மீண்டும் திரும்பினார்.

11வது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டியின் 110 மீட்டர் ஆடவர் தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் வென்று, தொடர்ந்து 3வது முறையாக தங்கப்பதக்கத்தைப் பெற்றார். ஆடவர் மும்முறை நீளம் தாண்டுதல் போட்டி, குண்டு எறிதல் போட்டி, சம்மட்டி எறிதல் போட்டி ஆகியவற்றில் சீன விளையாட்டு வீரர்களின் சாதனைகள் குறிப்பிடதக்க மேம்பாட்டை பெற்றுள்ளன என்று சீன தேசிய விளையாட்டு ஆணையத்தின் தடகள நிர்வாக மையத்தின் துணைத் தலைவர் Feng Shuyong தெரிவித்தார்.
2011ம் ஆண்டு உலக தடகள போட்டி மற்றும் 2012ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகளுக்கு சிறந்த அடிப்படையை இந்த சாதனைகள் வழங்கும் என்று அவர் கூறினார்.

புள்ளிவிபரங்களின் படி, 11வது தேசிய விளையாட்டுப் போட்டியில், 5 உலக சாதனைகளும் 16 ஆசிய சாதனைகளும் பதிவாகின. 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், சீன பிரதிநிதிக் குழு 51 தங்கப் பதக்கங்களைப் பெற்றது. இந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் சீன விளையாட்டு வீரர்களின் சிறந்த வெளிபாட்டால், 2012ம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், சீன வீரர்கள் மேலும் நல்ல சாதனைகளை பெறுவதில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.