சீன தலைமையமைச்சர் வென் சியாபாவ் 7ம் நாள் கெய்ரோவிலான அரபு நாடுகள் லீகின் தலைமையகத்தில், நாகரிகத்தின் பன்மைத்தன்மைக்கு மதிப்பளிப்பது என்ற தலைப்பில் முக்கிய உரை நிகழ்த்தினார். அரபு நாடுகள் இதற்குப் பல்வேறு மறுமொழிகளை அளித்துள்ளன. அரபு நாடுகளின் முக்கிய செய்தி ஊடகங்களும் 8ம் நாள் இவ்வுரையை வெளியிட்டன. அரபு நாடுகளின் தூதாண்மை அதிகாரிகளும் இதை வெகுவாக பாராட்டினர்.
சீன-ஆப்பிரிக்க மன்றத்தின் 4வது அமைச்சர் நிலைக் கூட்டத்தில்
மிக முக்கிய செய்திகளை, வென் சியாபாவ் தனது உரையில் தெரிவித்தார். உலகின் பாதுகாப்பையும் அமைதியையும் வளர்ச்சியையும் நனவாக்கும் வகையில், கூட்டு முயற்சியுடன் ஒற்றுமையை வலுப்படுத்துமாறு, அவர் வேண்டுகோள் விடுத்தார். வென் சியாபாவின் உரை, அரபு நாடுகள் சீனாவுடன் ஒத்துழைப்பதற்கான புதிய துவக்கப் புள்ளியாகும் என்று, அரபு நாடுகள் லீகின் துணை தலைமைச் செயலாளர் Ahmad Bin Hali தெரிவித்தார். அரபு மற்றும் இஸ்லாமிய உலகத்துடன் உறவை வலுப்படுத்தி, அரசியல் நம்பிக்கையையும், பல துறைகளிலான எதிர்கால ஒத்துழைப்பையும் ஆழமாக்குவதில் சீனா முக்கியத்துவம் அளிக்கிறது என்று வென் சியாபாவ் வலியுறுத்தினார். கத்தார் செய்தி நிறுவனம் 8ம் நாள் இதை முக்கிய செய்தியாக வெளியிட்டது. பாலஸ்தீன செய்தி நிறுவனம் 8ம் நாள் வென் சியாபாவின் உரையை ஒளிபரப்பியது. மத்திய கிழக்கு பிரதேசம் அமைதியை நனவாக்குவதை ஆதரிப்பதாக சீன தலைமையமைச்சர் வலியுறுத்தினார் என்பதை இவை முக்கியமாக அறிவித்தன.
|