க்ளீட்டஸ் – இன்று வாணி, க்ளீட்டஸ் இருவரும் உங்களுக்குத் தொடர்ந்து சுவையான சீன உணவு வகைகள் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். வாணி – அனைவரும் அறிந்தவாறு, முட்டை சத்துள்ள ஒரு உணவு வகையாகும். நாள்தோறும் ஒரு முட்டையைச் சாப்பிட்டால், அது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும். க்ளீட்டஸ் – இன்றைய நிகழ்ச்சியில் முட்டையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு புதிய உணவு வகை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். வாணி – ஆமாம், சீனத் தனிச்சிறப்பு மிக்க முட்டை தயாரிப்பு முறை இதுவாகும். க்ளீட்டஸ் – அப்படியா, இந்தத் தனிச்சிறப்பு பற்றி கூறுங்களேன். வாணி – இந்தியாவை போல, சீனாவும் உலகில் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகும். சீன உணவு வகைகளைத் தயாரிப்பதில் சில வேளைகளில் தேயிலை பயன்படுத்தப்படுகின்றது. க்ளீட்டஸ் – இன்றைய முட்டை உணவு வகை தயாரிப்பில் தேயிலையும் பயன்படுத்தப்படுகின்றது. அப்படிதானே? வாணி – நீங்கள் சொன்னது சரி. இன்று நாம் தயாரிக்கும் வறுவலின் பெயர் தேயிலை முட்டை. அடுத்து, தேவையான பொருட்கள் பற்றி கூறுகின்றேன்.
முட்டை 6 தேயிலை சிறிதளவு சமையல் எண்ணெய் 5 மில்லி லிட்டர் காய்ந்த சிவப்பு மிளகாய் 2 சமையல் மது 10 மில்லி லிட்டர் சோயா சாஸ் 20 மில்லி லிட்டர் உப்பு 2 தேக்கரண்டி சர்க்கரை 5 கிராம் நல்லெண்ணெய் 3 கிராம் மிளகுத் தூள் சிறிதளவு சீன இலவங்கப்பட்டை 1 இஞ்சி 2 துண்டுகள் பூண்டுப்பல் 3 க்ளீட்டஸ் – ஐயோ, இந்த முட்டையைத் தயாரிப்பதற்கு அதிக பொருட்கள் தேவை. போலிருக்கின்றதே? வாணி – ஆமாம். இது தான் இன்றைய உணவு வகையின் தனிச்சிறப்பாகும்.
வாணி – முதலில் முட்டைகளை கழுவி சுத்தம் செய்யுங்கள். பிறகு, ஒரு வாணலியில் அவற்றை போடுங்கள். வாணலியில் போதுதியளவு தண்ணீரை ஊற்றவும். க்ளீட்டஸ் – இந்த வாணலியில் முறையே, மிளகுத் தூள், காய்ந்த மிளகாய், இஞ்சி, தேயிலை, பூண்டு சீன இலவங்கப்பட்டை ஆகியவற்றை போடுங்கள். வாணி – முட்டைகளை வேகவிடுங்கள். இந்தப் போக்கில், சோயா சாஸ், சமையல் மது, உப்பு ஆகியவற்றை வாணலியில் சேர்க்கலாம். க்ளீட்டஸ் – வாணலியிலுள்ள நீர் கொதித்த பின், சர்க்கரையை போடலாம். சமையல் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் இதில் ஊற்றலாம். வாணி – மேலும் 10 நிமிடங்கள் வேகவிடுங்கள். க்ளீட்டஸ் – இப்போது, என்ன செய்ய வேண்டும்? வாணி – இப்போது, எமது முட்டைகள் வேகவைக்கப்பட்டுள்ளன. அவற்றை நீரிலிருந்து வெளியே எடுக்க வேண்டும். ஒரு பெரிய தேக்கரண்டி மூலம் எடுத்து அவற்றின் தோலை லைசாக விரிசல் விடுவது போல் தட்டிக்கொள்ளுங்கள். ஆனால் தோலைத் தனியே நீக்கக் கூடாது. க்ளீட்டஸ் – தோலை நீக்க வேண்டாமா? வாணி – வேண்டாம். பிறகு, அவற்றை மீண்டும் வாணலியின் சூப்பில் மீண்டும் போடுங்கள். தொடர்ந்து கொதிக்க வையுங்கள்.
க்ளீட்டஸ் – எவ்வளவு நேரம் தேவை? வாணி – மேலும் அரை மணி நேரம் தேவைப்படும். க்ளீட்டஸ் – உடனடியாகச் சாப்பிடலாமா? வாணி – சாப்பிடலாம். ஆனால், அவற்றை சூப்பில் அப்படியே வைத்தால், மறு நாள் இந்த முட்டைகள் மேலும் சுவையாக இருக்கும். க்ளீட்டஸ் – என்ன, நேயர்களே, இந்த சுவையான முட்டைகளை நீங்கள் வீட்டில் தயாரிக்கலாம். அல்லவா? சமைத்து ருசிப்பாருங்கள். கோடைகாலத்தில் தயாரிக்கப்பட்ட முட்டைகள் குளர் பெட்டியில் வைத்தப் பின் அதன் சுவை மேலும் அருமை. முயற்சியுங்கள். வாணி – இன்னும் ஒரு சிறிய குறிப்பு. முட்டைகளை வேகவைக்கும் போது, குளிர் தண்ணீர் தேவைப்படும். இப்படி செய்தால், வேகவைக்கும் போது, முட்டையின் தோல் எளிதாக உடைந்து போதாது.
|