• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-11 14:36:33    
கோயில் எலிகள் 1

cri

யாருக்கு எந்த பொறுப்பை தருவது என்பதை பற்றிய தெளிவும், நுட்பமும் தெரிந்துவிட்டால், நாம் முன்னெடுக்கும் செயல்கள் எதுவாயினும், வெற்றியை சுவைக்கும் சாத்தியம் வலுவாகிவிடும். இதைத்தான் இன்றைக்கு மனிதவளம், மனிதவள மேலாண்மை, மனிதவள மேம்பாடு என்று கூறுகின்றனர்.
கிமு 5ம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்த லி கெ என்பவர், ஒரு மனிதனை பற்றி அறிய ஐந்து அம்சங்களை தெரிந்துகொண்டால், அவன் ஒரு குறிப்பிட்ட பொறுப்புக்கு ஏற்றவனா என்பது தெரிந்துவிடும் என்கிறார். அவர் கூறும் ஐந்து அம்சங்கள் இவைதான்:
ஒருவன் பெரிய மனிதனாக மாறுவதற்கு முன், அவன் எவரோடெல்லாம் பழகுகிறான் என்பதை கவனி.
அவன் செல்வந்தனானால் யாருக்கு அவன் பணம் கொடுக்கிறான் என்பதை கவனி.
அவன் உயர் பதவியேதும் அடைந்துவிட்டால், யாருக்கு அவன் பதவி உயர்வு அளிக்கிறான் என்பதை கவனி.
அவன் துன்பத்தில் இருக்கையில், எதையெல்லாம் அவன் செய்ய மறுக்கிறான் என்று கவனி.


அவன் ஏழையாகும் போது, எதை அவன் ஏற்க மறுக்கிறான் என்பதை கவனி.
இவற்றை நீ அறிந்துகொண்டால், அவனது பண்புநலன்களை பற்றிய புரிதல் கிடைத்துவிடும். அதன் பின் அவன் ஒரு குறிப்பிட்ட பணியை, பதவியை ஏற்க பொருத்தமானவனா இல்லையா என்பதை கணித்துவிடலாம் என்கிறார் லி கெ. அவர் இதையெல்லாம் குறிப்பிட்டது என்னவோ, ஒரு தலைமையமைச்சனை எப்படி தெரிவு செய்யவேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், இவை எல்லா பதவிக்கும், பணிக்கும் பொருந்தும் என்பது கண்கூடு.
ஆக, உரிய நபர்களை தெரிவு செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் இருப்பின் அது, வெற்றிக்கு வழி தேடித்தரும் என்பது உறுதி.
இனி தொடரும் வாரங்களில் இப்படி, மனிதவள ஆற்றல், திறமை மற்றும் பொருத்தமான பணி ஆகியவை சார்ந்த கதைகள் உங்களுக்காக வழங்கப்படும், கேட்டு மகிழுங்கள்.
ச்சி நாட்டின் கோமகன் ஹுவான் ஒரு நாள் தன் தலைமையமைச்சர் குவான் ஷுங்கை அழைத்து, நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்ன/எது? என்று கேட்டாராம். கோமகன் ஹுவானின் கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் இதுதான், " கோயிலில் உள்ள எலிகளை போன்ற்வர்களே, நாட்டிற்கு பெரிய அச்சுறுத்தல்". கோமகன் இதற்கு விளக்கமளிக்குமாறு கோரினார்.


"பிரபு, நீங்கள் அனேகமாக கோயில் சுவற்றிலான எலிகளை பார்த்திருப்பீர்கள். கோயில் என்பது ஒரு புனிதமான இடம். ஆனால், எலித்தொல்லை கோயிலில் அதிகரித்துவிட்டால், நம்மால் செய்யக்கூடியது பெரிதாக ஒன்றுமில்லை. எலிகளை நெருப்பு மூட்டி புகை கொண்டு விரட்டலாம் ஆனால் நெருப்பால் கோயில் தீ பற்றிக்கொள்ளக்கூடும், அது புனிதமான இடத்தை நாமே அழித்தது போலாகிவிடும். சுவற்றிலுள்ள ஓட்டைகளில், பொந்துகளில் தண்ணீர் ஊற்றி எலிகளை துரத்திவிடலாம், ஆனால் அதே தண்ணீர் கோயிலின் ஓவியங்கள், பூச்சுகளை அழித்து, அலங்கோலமாக்கிவிடும், கோயிலின் அழகை நாமே சீர்குலைத்தது போலாகும்.
ஆக, எலித்தொல்லையை ஒழிக்க நம்மால் பெரிதாக ஒன்றும் செய்துவிட இயலாது. அதேபோலத்தான் ஆட்சியாளருக்கு, அரசருக்கு நெருக்கமாகவுள்ள கெட்ட மனிதரும்.

தன்னலவாதிகளும், சந்தர்ப்பவாதிகளுமான கெட்ட பண்புள்ளவர்கள் அரசருக்கு நெருக்காமிவிட்டால், அது நல்லதல்ல. தங்களுடைய செல்வாக்கை, தங்களுக்கு நன்மை தேடிக்கொள்ள, தங்களுக்கு சாதகமாக அனைத்தையும் மாற்றிக்கொள்ள அவர்கள் முனைவார்கள். லஞ்சமும், ஊழலும் அவர்களுக்கு கைவந்த கலையாகிவிட, சொந்த நலனை முன்னிறுத்தி நாட்டின் நலனுக்க எதிராக அவர்கள் செயல்படுவர். வெளிநாட்டு சக்திகளுக்கு துணையாகி, அரசருக்கு எதிராக உளவு சொல்பவர்களாக அவர்கள் மாறிவிடுவர். தன் சொல்லைக் கேட்போருக்கு நன்மை செய்து, பாரபட்சம் காட்டும் இந்த கெட்ட உள்ளம் கொண்டோர், தம் சொல் கேளாதவர்களை, தம் விருப்பத்தின் படி செயல்படாதவர்களின் வாழ்க்கையை நாசமாக்கவும் தயங்கமாட்டார்கள். நடப்பது என்னவென்று அரசனுக்கு தெரியாதபடி பார்த்துக்கொள்ளும் இந்த கெட்ட மதி கொண்டோர் தண்டிக்கப்படவேண்டியவர்கள், ஆனால், அரசனோ இவர்கள் சொல்லை நம்பும்படியாக இவர்கள் நயவஞ்சக நாடகம் செய்பவர்களாக இருப்பதால், அகப்படாமல் தப்பித்துக்கொள்வர். ஆனால் இத்தகையோரது செயல்கள் தடுக்கப்ப்டாவிட்டால், நாடு அழிவை நோக்கிச் செல்வது உறுதி" என்றார் தலைமையமைச்சர் குவான் ஷுங்.