• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-11 14:40:02    
உலக சீருந்து பந்தைய சாம்பியன் போட்டி

cri

நவம்பர் 2 முதல், 4ம் நாள் வரை, 2009ம் ஆண்டு உலக சீருந்து சாம்பியன் போட்டி சீனத் தேசிய விளையாட்டு அரங்கான பறவைக் கூட்டில் நடைபெற்றது. இந்த போட்டி சீனாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். 3ம் நாள் நடைபெற்ற நாட்டின் குழுப் போட்டியில் சீன வீரர் Dong Hebin மற்றும் Han Han இருவரும் சீன அணியின் சார்பில் கலந்துகொண்டனர். இறுதியில், உலக Formula ஒன்று சீருந்து பந்தயத்தின் முன்னாள் சாம்பியன் பட்டத்தைப் பெற்ற Michael Schumacher, இளம் வீரர் Sebastian Vettel தலைமையிலான ஜெர்மனி அணி 2-1 என்ற சாதனையில், 2009ம் ஆண்டு உலக Formula ஒன்று சீருந்து பந்தயத்தின் சாம்பியன் பட்டத்தைப் பெற்ற Jenson Button

தலைமையிலான பிரிட்டன் அணியை வென்றது. தொடர்ந்து 3வது முறையாக உலக சீருந்து சாம்பியன் போட்டியில் நாட்டின் சார்பான குழுப் போட்டியின் சாம்பியன் பட்டத்தை Michael Schumacher, Sebastian Vettel பெற்றுள்ளனர்.
2010ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு 100 நாட்களே இருகின்ற தருணத்தில், 4ம் நாள் Ottawa நகரின் தலைநகர தகவல் மைய கட்டிடத்துக்கு முன்னால் கனடா அரசு கொண்டாட்ட நடவடிக்கைகளை

மேற்கொண்டது. கனடாவின் விளையாட்டு துறை அமைச்சர் Gary Lunn உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் விளையாட்டு வீரர்களின் பிரதிநிதிகளும் இந்த நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர்.
2010ம் ஆண்டு பிப்ரவரி 12 முதல், 28ம் நாள் வரை, 2010ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியும், மாற்று திறனுடையோர் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியும் கனடாவின் மேற்கு பகுதியிலுள்ள Vancouver மற்றும் Whistler நகரங்களில் நடைபெறும்.